வால்மார்ட் தந்திரம், கொந்தளிக்கும் வணிகர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னய்யா.. நீங்க. வேற. இப்ப தான் கட்சிங்க பந்த் பண்ணாங்க. இப்ப நீங்க பந்த் பண்றீங்க என்ன தான் பிரச்னை என்று பார்த்தால் வால்மார்ட்.

 

வால்மார்ட் அறிவிப்பு

வால்மார்ட் அறிவிப்பு

சமீபத்தில் ஃப்ளிப்கார்ட்-ன் 77 சதவிகித பங்குகளை 16 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கிய வால்மார்ட். இப்போது வால்மார்ட். தான் கையகப்படுத்திய ஃப்ளிப்கார்ட்டின் மூலம், வால்மார்ட் நிறுவனத்தின் பொருட்களை முழுமையாக ஆன்லைனில் விற்க இருக்கிறது. அதாவது இனி ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யும் பொருட்களை வால்மார்ட் சிங்கிள் சப்ளையராக சப்ளை செய்து லாபம் பார்க்கும்.

சிங்கிள் பிராண்டுகள்

சிங்கிள் பிராண்டுகள்

சிங்கிள் பிராண்டுக்கு உதாரணம் ஆப்பிள். ஆப்பிள் ஷோரூம்களுக்கோ, ஆப்பிள் சர்வீஸ் செண்டர்களுக்கோ போனால் எப்படி முழுமையாக ஆப்பிளின் பொருட்கள் மட்டுமே இருக்கும். இது தான் சிங்கிள் பிராண்ட் நிறுவனங்கள்.

மல்டி பிராண்டுகள்
 

மல்டி பிராண்டுகள்

வால்மார்ட் & பிக் பசார் இதற்கு நல்ல உதாரணங்கள். இவர்கள் ஒரு கடையிலேயே பல பிராண்டு பொருட்களை விற்பார்கள். பிக் பசார் துணிக்கடைகளை எடுத்துக் கொள்வோம். Allen solly, Levis, Adidas, Reebok, Indian terrain, Vanheusen, Pepe Jeans, Wrangler, Park avenue என்று உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பிராண்டு பொருட்களை கலந்து விற்பார்கள். இவர்கள் தான் மல்டி பிராண்ட் நிறுவனங்கள்.

 சிங்கிள் பிராண்டு ரீடெயில் சட்டம்

சிங்கிள் பிராண்டு ரீடெயில் சட்டம்

ஒரு சிங்கிள் பிராண்ட் நிறுவனம் இந்தியாவில் வந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் முழுமையாக வாங்கி தங்கள் வியாபாரத்தைச் செய்யலாம் அல்லது அவர்களே உள்ளே வந்து ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கலாம். இதற்கு அனுமதி வழங்கப்படும்.

 மல்டி பிராண்டு ரீடெயில் சட்டம்

மல்டி பிராண்டு ரீடெயில் சட்டம்

ஆனால் மல்டி பிராண்டுகள் நிறுவனம், இந்தியாவில் வந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், ஏதாவது ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக 51% பங்குகளை வாங்கிக் கொண்டு அந்த நிறுவனத்தின் முதலாளி ஆகலாம். அவர்களே சொந்தமாக ஒரு கடையை போட்டு வியாபாரம் செய்ய முடியாது. மிக முக்கியமாக இதற்க் அரசு அனுமதி வேண்டும்.

ஓட்டையைப் பயன்படுத்தும் வால்மார்ட்

ஓட்டையைப் பயன்படுத்தும் வால்மார்ட்

இப்போது அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டத்தில் 5.2.15.4 Multi Brand Retail Trading என்கிற தலைப்பின் கீழ் 9-வது சரத்தாக Retail trading, in any form, by means of e-commerce, would not be permissible, for companies with FDI, engaged in the activity of multi-brand retail trading என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

வால்மார்ட் பதில்

வால்மார்ட் பதில்

டிரேடிங் என்றால் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் வாங்கி விற்க வேண்டும். ஆனால் இங்கு நாங்கள் ஃப்ளிப்கார்ட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்க இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் மீண்டும் அதை விற்க மாட்ட்டார்கள். எனவே இது டிரேடிங் ஆக்டிவிட்டி கிடையாது. என்று சொல்லி தன் விற்பனையை ஃப்ளிப்கார்ட் மூலம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதை எதிர்த்து தான் அனைத்து இந்திய வர்த்தகரக்ள் சம்மெளனம் வரும் செப்டம்பர் 28, 2018 அன்று நாடு தழுவிய பந்தை அறிவித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

all indian traders confederation is going to organise a bundh on sep 28, 2018

all indian traders confederation is going to organise a bundh on sep 28, 2018
Story first published: Thursday, September 27, 2018, 11:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X