விரைவில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருட்களின் விலை உயர வாய்ப்பு..!

மத்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறையினைச் சரிசெய்யப் புதன்கிழமை இறக்குமதி செய்யக்கூடிய 19 பொருட்கள் மீதான சுங்க வரியினை உயர்த்தியுள்ளது.

இதனால் காலாணிகள், ஏசி, குளிர்சாதன பெட்டி போன்ற பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

 நுகர்வோர் சாதனங்கள்

நுகர்வோர் சாதனங்கள்

சுங்க வரி உயர்வால் ஏசி, வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டிகள், வாச்ஜிங் மெஷின், ஏசி மற்றும் பிடிஜ் கம்ப்ரஸர் மற்றும் ஸ்பீக்கர்களின் விலை 5 முதல் 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளது.

காலணி மற்றும் டயர்

காலணி மற்றும் டயர்

காலணிகளின் விலை 10 முதல் 15 சதவீதமும், ரேடியல் கார் டயர் விலை 10 முதல் 15 சதவீதம் வரையிலும் உயர உள்ளது.

வைரங்கள் மற்றும் விலை மதிப்பற்ற கற்கள்

வைரங்கள் மற்றும் விலை மதிப்பற்ற கற்கள்

வைரம், விலை மதிப்பற்ற கற்கள், இறக்குமதி செய்யப்படும் ஆபரணங்கள் உள்ளிட்டவையின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள்

பிளாஸ்டிக் பொருட்கள்

கழிவறையில் பயப்படுத்தும் பிளாஸ்டிக் வேசின், சிங்க், ஷவர் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தும் மேஜை, சமையல் சாதனங்கள் மற்றும் பிற வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்களின் விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர உள்ளது.

 மரச்சாமான்கள் மற்றும் பயணச் சாதனங்கள்

மரச்சாமான்கள் மற்றும் பயணச் சாதனங்கள்

மரச்சாமான்கள், அலுவலக ஸ்டேஷ்னரி பொருட்கள், பெட், வளையல் பொருட்கள், டிராவல் பேக், சூகேஸ் போன்றவையின் விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+