நாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..!

விவசாயிகளின் வாழ்வு மேம்பட வால்மார்ட் 25 மில்லியன் டாலர் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்யப் போவதாக அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜுடித் மெகென்னா (Judith McKenna) தெரிவித்திருக்கிறார்.

 விவசாயிகளிடம் இருந்து

விவசாயிகளிடம் இருந்து

வால்மார்ட்டின் "கேஷ் அண்ட் கேரி" கடைகளுக்குத் தேவையான பொருட்களில் 25 சதவிகித பொருட்களை, இந்திய விவசாயிகளிடம் இருந்து வாங்க இருக்கிறார்களாம். இதனால் விவசாய நடுத்தரகரக்ளின் எண்ணிக்கை குறைந்து லாபம் நேரடியாக விவசயிகளுக்கே கிடைக்குமாம். பட் ஆன் ஒன் கண்டீஷன் "எங்கள் தரத்துக்கு விவசாயப் பொருட்கள் இருக்கும் பட்சத்தில்".

இதுவரை

இதுவரை

வால்மார்ட்டின் கடைகள் எங்கு இருக்கிறதோ அதற்கு அருகாமையில் உள்ள பெரிய பண்ணை விவசாயிகளிடம் தான் விவசாயப் பொருட்களை வாங்குவார்களாம். இப்போது சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் இருந்து வாங்க இருப்பதால் அவர்களின் வாழ்கை மேம்பாட்டுக்கு வால்மார்ட் தன் கடமையைச் செய்கிறதாம். 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று சொன்ன இந்தியப் பிரதமரின் கனவுக்கு உரமிடுவது போன்ற பணியாம் இது.

விவசாயிகளுக்குப் பயிற்சி

விவசாயிகளுக்குப் பயிற்சி

மேலே சொன்ன 25 மில்லியன் டாலர் நிதியில், விவசாயிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் நல்ல மகசூலைக் காண செய்ய வேண்டிய பயிற்சிகளையும் வழங்க இருக்கிறதாம்.

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

வால்மார்ட் நிறுவனத்தின் இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளு வேண்டும். எங்களால் விவசாயிகளின் சந்தை அறிவைப் பெருக்கம், தங்கள் விவசாய முறைகளை புதுப்பித்துக் கொள்ளுதல் போன்ற இயல்பான நல்ல விஷயங்கள் இந்திய விவசாயிகள் ஒத்துழைப்போடு நடக்க வேண்டும். இது ஒரு பெரிய வாய்ப்பு என்று கூறுகிறார் மெக்கென்னா.

தற்போதைய கொள்முதல்

தற்போதைய கொள்முதல்

வால்மார்ட் நிறுவனத்தின் கேஷ் அண்ட் கேரி ஸ்டோர்களில் விற்கப்படும் விவசாயப் பொருட்களில் 95 சதவிகிதத்துக்கு மேல் இந்தியாவிலேயே இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து தான் வாங்குகிறதாம் வால்மார்ட் இந்தியா. இனி இந்த எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் கம்பெனிக் கொள்முதல்களை குறைத்துக் கொள்ள இருக்கிறார்களாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+