கோயம்புத்தூர்: இந்தியாவில் உணவு டெலிவரி சேவையினை விரிவு படுத்தும் நோக்கத்தில் வியாழக்கிழமை புதியதாக 20 நகரங்களில் தங்களது நுழைய இருப்பதாக ஃபுட்பாண்டா தெரிவித்துள்ளது.
அதில் 13 நகரங்களில் வியாழக்கிழமை முதல் ஃபுட்பாண்டா நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நகரங்கள்
கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், சண்டிகர், கான்பூர், லக்னோ, இந்தூர், அகமதாபாத், நாஷிக், நாக்பூர், புவனேஷ்வர், கவுகாத்தி, விஷாகபட்டினம் உட்பட 13 நகரங்களில் ஃபுட்பாண்டா உணவு டெலிவரி சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஓட்டல் மற்றும் வாடிக்கையாளர்கள்
ஃபுட்பாண்டா நிறுவனத்தின் டெலிவரி நெட்வொர்க்குடன் புதிய நகரங்களில் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவத்தினைப் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
டெலிவரி கூட்டாளிகள்
உணவு டெலிவரியில் மேலும் சிறப்பாகச் சேவை அளிக்கும் நோக்கத்தில் 60,000 புதிய கூட்டாளிகளுடன் ஃபுட்பாண்டா நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் இணைய உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெலிவரி கூட்டாளிகள் உள்ளனர்.
ஓலா
ஓலா நிறுவனம் சென்ற ஆண்டு ஃபுட்பாண்டா இந்தியா பிரிவினை கைப்பற்றிய பிறகு நடக்கும் முக்கிய விரிவாக்கப் பணியாக இது உள்ளது.


Click it and Unblock the Notifications