இந்தியா அதிகரித்து வரும் இளையதலைமுறையினர் கொண்ட நாடு. ஆன்லைன் பிசினஸ்கள் செழிக்கத் தொடங்கி இருக்கும் நாடு. அளவுக்கு மீறிய மக்கள் தொகை கொண்ட நாடு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
மாதம் ஒன்றுக்கு
கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா கண்ட ஸ்மார்ட் ஃபோன் வளர்ச்சியால், இணையப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர் 2016-ல் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த பயன்பாடு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 2016 - 17 ஆண்டுகளில் மாதம் ஒன்றுக்கு இந்தியர்கள் சராசரியாக 7.4 ஜீபி டேட்டாவைப் பயன்படுத்தி வந்தார்கள். மொத்த மாதத்துக்கே.
இன்று
இன்று இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை அசால்ட்டாக தீர்த்துக் கட்டுகிறார்கள் நம்மவர்கள். அதோடு நாள் ஒன்றுக்கு 90 - 130 நிமிடங்கள் மேல் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்றும் நீல்சன் இந்தியா கணித்திருக்கிறது. இதில் சாதாரண குறுஞ்செய்தி அனுப்புவது தொடங்கி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வீடியோ காண்பது வரை அடக்கம்.
ஏன் இந்த வளர்ச்சி
இந்தியா இன்று ஸ்மார்ட்ஃபோன்களின் சரியான சந்தையாகி இருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்களை மக்கள் வாங்கும் விலைக்கு விற்பது மிகப் பெரிய விஷயம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது நீல்சன். அதோடு டெலிகாம் நிறுவன டேட்டா திட்டங்களும் செல்ஃபோன்களைப் போலவே விலை குறைவாகக் கிடைப்பதும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்று சொல்கிறது.
எதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்
இந்தியர்கள் பிரவுசர்களுக்குப் பின், சாட் மற்றும் விஓஐபி ரக ஆப்களை அதிகம் பயன்படுத்துகிறார்களாம். இதை எல்லாம் விட யூடாரன்டை பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தி அதற்கு முதல் இடம் கொடுத்திருக்கிறார்களாம். சுருக்கமாக ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம், கூகுள் குரோம் போன்ற அப்ளிகேஷன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ரூ 5000 இந்தியாவின் சராசரி
சராசரியாக ஒரு இந்தியன் ஸ்மார்டோனுக்காக 5000 ரூபாய் வரை செலவழிக்கிறான். இந்த தொகையினை அடிப்படையாக வைத்துத் தான் அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை வடிவமைத்து விலை நிர்ணயிக்கின்றன. எனவே இன்னும் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பிக் அப் ஆகாத இடங்களையும் கைப்பற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் போராடி வருகிறது.
இன்னும் புதிய கஸ்டமர்கள்
இன்னும் இந்தியாவில் அதிகம் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தாத மக்கள் இருக்கிறார்கள் எனவே இந்த எண்ணிக்கை எல்லாம் வரும் காலங்களில் இன்னும் நிச்சயமாக அதிகரிக்கும் என்று நீல்சன் கணித்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications