நியூ யார்க்: ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான அதிகாரிகள் குழு பொருளாதாரத் தடையால் கச்சா எண்ணெய் தேவையில் இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பிற நட்பு நாடுகளில் இருந்து அளிக்கக் கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் தலைமையிலான அரசு ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தினை ரத்து செய்தது. அது மட்டும் இல்லாமல் ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது.
பொருளாதாரத் தடைகள்
ஈரான் மீது வித்துள்ள பொருளாதாரத் தடையின் முதற் பகுதி ஏற்கனவே அமலுக்கு வந்து நிலையில் இந்தியா உட்படப் பிற உலக நாடுகள் அனைத்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியினை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
எச்சரிக்கை
எந்த நாடுகள் எல்லாம் ஈரான் உடன் வர்த்தகத்தினைத் தொடர்கிறதோ அவர்களுக்கு அமெரிக்க வங்கி மற்றும் நிதி அமைப்பில் இருந்து தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
ஒத்துழைக்காத 5 நாடுகள்
இருப்பினும் இதற்கு இங்கிலாந்து, ரஷ்யா உட்பட 5 நாடுகள் ஒத்துழைக்காமல் ஈரான் உடன் வர்த்தகத்தினைத் தொடர்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காகவே ஐரோப்பிய யூனியன் புதிய பரிவர்த்தனை முறையினை அறிமுகம் செய்துள்ளன.
இந்தியா
ஈரானில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ள நிலையில் அமெரிக்கா விதித்துள்ள தடையால் தற்போது இறக்குமதியினைக் குறைத்துள்ளது மட்டுமில்லாமல் விரைவில் முழுமையாக நிறுத்த உள்ளது.
ஒருவேலை இந்தியா முழுமையாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்தும் நிலையில் மிகப் பெரிய தட்டுப்பாடு நிலவும். இது குறித்து அமெரிக்காவிடம் தெரிவித்துள்ள இந்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மட்டும் விலக்கு கேட்டது.
அமெரிக்கா
இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அமெரிக்கா தற்போது தங்களது நண்பனான இந்தியாவிற்குத் தங்கு தடையின்றிப் பிற நட்பு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யினைப் பெற்றுத் தர முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!



Click it and Unblock the Notifications