வெரிசானின் 1,000 ஊழியர்களுக்கு ஆப்படிக்கிறதா இன்போசிஸ்?
பெங்களூரு: வெரிசான் நிறுவனத்தில் இருந்து இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐட் சேவைகள் நிறுவனமான இன்போசிஸ்க்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான வேலை பிராஜக்ட் கிடைத்துள்ளது.
அதன் முதற்கட்டமாக வெரிசான் நிறுவனத்தின் 1,000 ஊழியர்கள் இன்போசிஸ் நிறுவனத்திற்கு நகர்கின்றனர் என்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
அச்சம்
இன்போசிஸ் நிறுவனம் வெரிசான் நிறுவனத்தில் இருந்து எடுக்க இருக்கும் சில முக்கிய ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்க உள்ள அதே நேரம் சில ஊழியர்கள் எங்குத் தங்களது வேலை பரிபோய்விடுமோ என்று அச்சமும் அடைவதாக ஊழியர்களில் சிலர் தெரிவித்தனர்.
வெரிசான்
இது குறித்து ஐடி ஊழியர்கள் சங்கமான new-democrats.com அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் அளித்த வெரிசான் "எங்களது வணிகம் மற்றும் துறை மிகப் பெரிய மாற்றத்தினை எதிர்பார்க்கிறது. அதில் உள்ள சவால்களினை சரி செய்ய இது போன்ற நாடவடிக்கைகள் சாதாரணம் என்று தெரிவித்துள்ளது. வெரிசானில் இருந்து இன்போசிஸ் செல்ல இருக்கும் ஊழியர்கள் அங்கேயே தொடர்ந்து பணிபுரிவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனமும் வெரிசான் ஊழியர்கள் பணிக்கு எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும். இந்த ஊழியர்கள் இடம் பெயர்தல் இந்தியா மற்றும் அமெரிக்க அலுவலகங்களில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு
வெரிசான் நிறுவனத்தில் டிசம்பர் மாதமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அதனைத் தவிர்கவே வெரிசான் இப்படி ஊழியர்களை இன்போசிஸ் நிறுவனத்திற்கு மாற்றுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோரிக்கை
எனவே வெரிசான் நிறுவனம் இன்போசிஸ்க்கு ஊழியர்களை மாற்றம் செய்வதற்கு முன்பு ஊதிய உயர்வினை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
சந்தேகம்
மறு பக்கம் இன்போசிஸ் இந்த ஊழியர்களை நீண்ட காலத்திற்குப் பணியில் இந்த ஊழியர்களை வைத்து இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications