Indian spend Rs.90 lakhs to construct a set of bio toilet கழிப்பறைக்கு 90 லட்சம் ரூபாய் செலவழித்த இந்தியர்கள்.

மனுஷனுக்கு எப்புடி உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்னு சொன்னாங்களோ, அதே மாதிரி உடல் கழிவுகள வெளியேத்தவும் ஒரு முறையான இடம் வேணும். இத நம்ம மோடிஜியே ஒத்துக்கிட்டாருன்னா பாத்துக்குங்களேன். அப்படிப்பட்ட ஒரு இடத்த பத்தி தான் இப்ப பாக்கப் போறோம்.
எங்கே
இந்தியாவின் வர்த்தக தலை நகரமான மும்பையில தான் இப்படி ஒரு அருமையான கழிப்பறையக் கட்டி இருக்காங்க. இந்த கழிப்பறைக்கு பண்ண செலவு தான் 90 லட்சம் ரூபாயாம்.
யார்
ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தோட, சமாடெக் நிறுவனமும், மும்பை சர்ச் கேட் குடிமக்கள் சங்கமும் ஒன்னு சேர்ந்து இப்படி ஒரு 90 லட்சத்த காலி பண்ணி இருக்காங்க.
என்ன சிறப்பு
இந்த கழிப்பறையில பயன்படுத்துற தண்ணியோட அளவு ரொம்ப கம்மியா இருக்குமா. ஒரு மனிதன் ஒரு முறை கழிப்பறை பயன்படுத்திட்டு ஃப்ளெஷ் (Flush) பண்ணா ஒரு முறைக்கு சராசரியா எட்டு லிட்டர் தண்ணீர் காலியாகுமா. இப்ப இந்த பயோ கழிப்பறையில ஒரு முறை ஃப்ளெஷ் பண்ணா வெறும் 800 - 900 மில்லி லிட்டர் தண்ணீர் தான் செலவாகுmaam.
எப்படி கம்மி தண்ணி
தண்ணி குறைவா பயன்படுத்தினா, அடுத்து பயன்படுத்துறவங்களுக்கு கொஞ்சம் சிரமமா இருக்காதான்னு கேட்டதுக்கு, இதுல இருக்குற (vacuum technology) மூலம் கழிவுகள் உறிஞ்சப்படுதாம். அதனால், அடுத்து பயன்படுத்துறவங்களுக்கு பிரச்னை இல்லையாம். இந்த முறையத் தான் விமானங்கள்ள எல்லாம் பயன்படுத்துறாங்களாம்.
வேற என்ன சிறப்பு
இந்த கழிப்பறைகள்ள சோலார் பேனல்கள் இருக்குறதால மின்சார செலவும் கிடையாதாம். அது மட்டும் இல்லாம, நேரடியாவே மெரைன் டிரைவ் பகுதி கடல்ல கலக்குற மனிதக் கழிவு நிரை இந்த வகையான பயோ கழிப்பறைகள்ள மூலமா சில லட்சம் லிட்டராவது நிச்சயம் குறையும்ன்னு சொல்றாங்க.
ஒரு முறைக்கு எவ்வளவு ரூவா
அங்க தான் மெயின் அட்ராக்ஷனே. இந்த பயோ கழிப்பறைகள, எல்லாரும் இலவசமாக பயன்படுத்தலாம். முதல் கட்டமா ஒரு செட்டா இந்த ரக கழிப்பறைகள் ஆறு கட்டப்பட்டிருக்கு. இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்துல, மகாராஷ்டிரம் முழுக்க கட்டப்படும்ன்னு சொல்லி இருக்காங்க.


Click it and Unblock the Notifications