நாங்க தான் அதிக கருப்பு பணம் வெச்சிருக்கோம், என்ன இப்ப?

We are owning more black money than any other states in India. இந்தியாவிலேயே அதிக கருப்புப் பணம் வைத்துள்ள மாநிலம் நம் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் தான்

நாங்க தான் அதிக கருப்பு பணம் வெச்சிருக்கோம், என்ன இப்ப?

இந்தியாவுல கருப்புப் பணம் வெச்சிருக்கவங்க யாருன்னு, அந்த கருப்புப் பணம் இருக்குற வங்களுக்குக் கூட தெரியாது. அது தான் மத்திய அரசோட ஸ்டேட்மெண்ட். அதையும் மீறி அப்ப அப்ப கருப்புப் பண முதலைகள் லிஸ்ட அரசு வெளியிட்டாலும், அப்படியே தண்ணிய விட்டு ஆஃப் பண்ணிடுவாங்க. நாமலும் மறந்துருவோம். ஆனா இவங்க இருக்காங்களே, நேரே அரசாங்கத்துக்கிட்டயே "ஏன் கிட்ட இவ்வளவு கருப்பு பணம் இருக்கு"ன்னு சொன்ன சுத்த வீரனுங்க.

ஐடிஎஸ் (Income Declaration Scheme)

ஐடிஎஸ் (Income Declaration Scheme)

என் கிட்ட இருக்குற கருப்புப் பணத்தை வருமான வரித் துறையினரோ, வருவாய் துறை அதிகாரிகளோ பிடிச்சா... வெச்சிருக்குற தொகைய விட இரண்டு மடங்கு இல்ல மூன்று மடங்கு அதிகமா வரி கட்டணும். ஆக நானே முன் வந்து ஐயா என்கிட்ட இவ்வளவு கருப்புப் பணம் இருக்குன்னு சொல்லி இருக்குற கருப்புப் பணத்துல ஒரு 45 சதவிகிதத்த மட்டும் வரியா கட்டிட்டு பாக்கி 55 சதவிகித பணத்த வெள்ளைப் பணமா ஜாலியா செலவு பண்ணலாம். இது தான் Income Declaration Scheme. இந்த திட்டத்தை கடந்த ஜூன் 2016-ல நம்ம மோடிஜி தான் குத்துவிளக்கு ஏத்தி வெச்சு ஆரம்பிச்சாரு.

ஜூன் - செப்டம்பர்

ஜூன் - செப்டம்பர்

ஜூன் மாசம் ஆரம்பிச்சு, செப்டம்பர் 2016 வரையான நாலு மாசத்துல மட்டும் மொத்தமா வசூலான தொகை 65,250 கோடி ரூபாய். அதுல நம்ம மோடிஜீயோட மாநிலத்துக் காரங்க மட்டும் 18,000 கோடி ரூபாய். இந்த 18,000 கோடி, மொத்த தொகையில 27.5 சதவிகிதம்.

பரத்சிங் ஜாலா

பரத்சிங் ஜாலா

இந்த மனிஷன் 21 டிசம்பர் 2016-ல போட்ட ஆர்டிஐ-க்கு தான் வருவான வரித்துறை மேலே சொன்ன விவரங்கள கொடுத்திருக்கு. ரொம்ப வேகமா ஒரு ரெண்டு வருஷம் தடவி கண்டுபிடிச்சிருக்காங்க நம்ம வருமான வரித் துறையினருங்க. இப்ப தான் செய்தியே வெளியாகி இருக்கு. அப்ப லேட்டஸ்ட் அப்டேட் எவ்வளவு இருக்கும்ன்னு நீங்களே கணக்கு போட்டுப் பாருங்க என்கிறார் பரத் சிங்.

அலைக்கழிப்பு

அலைக்கழிப்பு

பரத்சிங் 2016 டிசம்பரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி போட்ட மனுவுக்கு, கூடுமான வரை "அப்ளிகேஷன் தப்பா இருக்கு, இது எங்க டிபார்ட்மெண்ட் இல்ல, சார் கமிஷனர் ஊருல இல்ல நாளைக்கு வாங்க" ன்னு வழக்கமான டியூன்களே போடப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் தாண்டி அரசு அலுவலகங்களில் வழக்கமான அலைக்கழிப்புகளைக் கடந்து இந்த தகவலை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் பரத்சிங் ஜாலா.

யெஸ்ஸான ஷா

யெஸ்ஸான ஷா

பரத்சிங் ஜாலா தன்னுடைய ஆர்டிஐ மனுவை சமர்பிக்கும் தருணத்தில் தான் ஷா என்கிற அஹமதாபாத் டீலர் 13,860 கோடியை வருமான வரித்துறைக்குக் காட்டி வரி கட்ட முன் வந்தார். ஆனா அந்த மனிஷன் ஒரு ரூபாய் கூட வரி கட்டாம அல்வா கிண்டிட்டாரு. வருமான வரித் துறையும் அப்புடியே மேட்டர விட்டுருச்சு. ஒருவேளை நம்ம மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி மாதிரி ஊர விட்டு கெளம்பிட்டாரா "இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா".

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+