ஆதார் கார்டால் தனிநபர் சுதந்திரம் பறிபோகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், அதில் உன்மை இல்லை. ஆதார் பாதுகாப்பானது தான் என்று உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் தீர்ப்பளித்தது. அதே நேரம் மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் எண் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய அமைப்பு
ஆனால் மத்திய அரசு QR குறியீடு மற்றும் பேப்பர் இல்லா வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரிபார்ப்பு முறைக்கான புதிய அமைப்பினை ஆதாரில் புகுத்த உள்ளதாகச் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.
என்ன சிறப்பு
இந்த மின்னணு வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பு முறைக்கு ஆதார் எண் தேவையில்லை, பையோமெட்ரிக் விவரங்கள் தேவையில்லை என்றும் தனிநபர் தகவல்கள் திருடு போக வாய்ப்புகள் இல்லை என்றும், அரசால் கூட மக்களின் ஆதார் பயன்பாட்டினை கண்காணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள்
மேலும் இந்த ஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு முறையினால் தனியார் நிறுவனங்களுக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் பையோமெட்ரிக் தரவுகள் சரிபார்ப்பு முறை மாறும் என்றும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குள் இந்தச் சரிபார்ப்பு முறை இருக்கும் என்றும் அரசு வட்டாரத்தில் இருந்து வருகின்ற தகவல்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
மத்திய அரசின் இந்தப் புதிய ஆதார் அமைப்பின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஆப்-லைன் முறையில் ஆதார் எண் வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரிபார்க்கும் முறை அளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி பையோமெட்ரிக் தகவல்கள் கொண்ட ஆதார் சரிபார்ப்பு முறையினைத் தான் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கக் கூடாது என்றும் கூறுகின்றன்னர்.
கூடுதல் ஆவண வசதி
புதிய வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரிபார்க்கும் முறையின் கீழ் வங்கி, டெலிகாம் போன்ற சேவை வழங்குநர்கள், அரசு துறைகள் உள்ளிட்டவை ஆதார் மட்டும் இல்லாமல் கூடுதலாகப் பிற அடையாள ஆவணங்களாக ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு உள்ளிட்டவையினையும் அளிக்கலாம்.
ஆதார் QR குறியீடு சரிபார்ப்பு ஓரு பார்வை
ஆதார் கார்டுகளை அச்சிடும் போது 3 QR குறியீடுகள் ஆப்லைன் சரிபார்ப்பிற்காக அளிக்கப்படும். இரண்டில் உறுப்பினரின் தனிநபர் விவரங்கள் மற்றும் புகைப்படமும், ஒன்றில் தனிநபர் விவரங்கள் மட்டுமிருக்கும். QR குறியீட்டை ஆதார் இணையதளம் மூலம் பதிவிறக்கலாம். இந்த QR குறியீட்டை அதற்கான சிறப்பு ஸ்கானார் சரிபார்க்கலாம். இந்த முறையில் ஆதார் எண் ஒருவராலும் கண்டறிய முடியாது. கைவிரல் ரேகை போன்ற விவரங்களும் தேவையில்லை. ஆதார் சர்வருடனும் தொடர்பில் இருக்காது. பிற ஆவணங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் விவரங்கள் சரிபார்க்கும் போது இது போன்ற ஆப்லைன் சரிபார்ப்பு இருக்காது. மின்னணு ஆதார் சரிபார்ப்பு முறையில் QR குறியீடு பயன்படுத்தும் போது மோசடி, ஏமாற்று வேலை , போட்டோஷாப் போன்றவற்றைச் செய்தால் மிகப் பெரிய ரிஸ்க்காக இருக்கும்.
தனிநபர் விவரங்கள்
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் மின்னணு சரிபார்ப்பு மற்றும் QR குறியீடு பாதுகாப்பினை மிகப் பெரிய அளவில் உறுதி செய்யும். அது மட்டும் இல்லாமல் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை மட்டும் அளிக்கும் முறையினைத் தேர்வு செய்துகொள்ளவும் அனுமதியும் அளிக்கிறது.
சந்தேகங்கள்
மத்திய அரசு புதிய ஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு முறையினை அறிமுகம் செய்தாலும் பிற நபர்களின் ஆதார் QR குறியீடு விவரங்களை வைத்து மோசடிகள் நடைபெறாமல் இருக்குமா? எப்படி ஆதார் தரவு தளத்துடன் இணையாமல் வாடிக்கையாளர்கள் விவரங்கள் ஆப்லைனில் சரிபார்க்கப்படும், அரசால் கூட ஆதார் பயன்பாட்டின் விவரங்களைப் பெற முடியாது என்றால் மோசடி நடைபெறும் போது எப்படி என்று எல்லாம் விளக்க வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications