ஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிந்து விட்டது என்ற கூறி வரும் நிலையில் அதனைப் பொய்யாக்கும் விதமாக இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் புதிய தலைமுறை டிஜிட்டல் திறன் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியத்தினை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்களில் பிரஷ்ஷர்களாக வேலைக்குச் சேறும் போது ஆண்டுக்கு அதிகபட்சமாக 3.5 லட்சம் வரையில் மட்டுமே சம்பளம் கிடைக்கிறது. இதுவே புதிய தலைமுறை டிஜிட்டல் திறனுடன் வரும் பிரஷ்ஷர்களுக்கு டிசிஎஸ் 6.5 லட்சம் ரூபாயினை அளிக்க உள்ளது.
ஊதிய உயர்வு
டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் இதன் முதற்கட்டமாக 1000 பிரெஷர்களுக்கு இந்த ஊதிய உயர்வினை அளித்துள்ளது என்றும் வரும் காலத்திலும் இது போன்ற புதிய டிஜிட்டல் திறன் உடையவர்களுக்கு அதிகச் சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அளிப்போம் என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
தேசிய தகுதி தேர்வு
புதிய டிஜிட்டல் தொழில்னுட்பங்களைத் தெரிந்து வைத்திருக்கும் பிரஷ்ஷர்களைப் பணிக்கு எடுக்கும் போது அதற்கு ஏற்றவாறு தேர்வுகளும் நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் டிசிஎஸ்-ன் தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குப் புதிய தலைமுறைக்கான தொழில்நுட்ப பயிற்சியும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் கல்லூரி மாணவர்கள்
இந்திய பொறியியல் கல்லூரி மாணவர்களைப் பணிக்கு எடுப்பதில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. இப்படிப் பணிக்கு எடுக்க இருப்பவர்களை தேசிய தகுதி தேர்வு கீழ் எடுக்கவும் டிசிஎஸ் முடிவு செய்துள்ளது.
முக்கியத் திறன்கள்
டிசிஎஸ் நடத்த உள்ள இந்தத் தேசிய அளவிலான திறன் தேர்வு மிக நீண்டது என்றும் அதற்குத் திறந்த கோடிங் திறன் தேவை என்றும் கூறப்படுகிறது. தற்போது ஐடி துறையில் மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு ஆய்வு ஆகிய தொழில்னுட்பங்களில் திறன் உடையவர்களுக்கு அதிகச் சம்பள உயர்வும் கிடைக்கிறது. இந்தத் திறன் அடிப்படையிளான ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்களில் மிகப் பெரிய தேவையும் உள்ளது என்று அன்மை ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
நேரம் சேமிப்பு
NQT தேசிய அளவிலான திறன் அறிவு தேர்வினை இந்த ஆண்டுத் தான் டிசிஎஸ் அறிமுகம் செய்தது. இதன் மூலம் முன்பு ஊழியர்களினை பணிக்கு எடுக்கத் தேவைப்பட்ட 3 முதல் 4 மாதங்கள் வரையிலான கால அளவு 3 முதல் 4 வாரங்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று டிசிஎஸ் நிறுவன கூறியுள்ளது.
வளாக நேர்காணல்
டிசிஎஸ் நிறுவனம் இந்தத் தேசிய திறன் தேர்வு கீழ் பணிக்கு எடுப்பது மட்டும் இல்லாமல் ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற பிரீமியம் கல்லூரி மானவர்களையும் வளாக நேர்காணல் கீழ் பணிக்கு எடுப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications