சர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..! யார் இவர்?

சர்வதேச நாணய நிதியம் கீதா கோபிநாத் என்ற இந்தியரை முதன்மை பொருளாதார நிபுணராக நியமித்துள்ளது. கீதா கோபிநாத் தான் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் ரகுராம் ராஜனுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இருந்து இரண்டாவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதார நிபுணராகக் கீதா பதவி ஏற்றுள்ளார்,

 கேரளா

கேரளா

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹார்வர்ட் பேராசிரியர் கீதா கோபிநாத் அவர்களை மாநிலத்தின் நிதி ஆலோசகராக 2017-ம் ஆண்டு நியமித்தது கேரளாவில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.

45 வயதான கீதா கோபிநாத் உலகளவில் மூன்றாம் சிறந்த பெண் பொருளாதார நிபுணர் ஆவார். அமர்த்தியா சென் அவர்களுக்குப் பிறகு முதல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் இந்திய பேராசிரியராக இருந்துள்ளார்.

 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்

கீதா கோபிநாத் அவர்களின் தந்தை டிவி கோபிநாத் அவர்கள் கேரள மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் தமங்காடு நம்பியார் குடும்பத்தாரைச் சேர்ந்தவர்.

கேரளா எனது சொந்த மாநிலம், எனது தாய், தந்தை இருவரும் கன்னூஎர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், எனவே கேரளாவின் வளர்ச்சிக்காக எனது திறன்களையும் முயற்சிகளையும் பங்களிக்க அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பினால் தலை வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார்.

 

கல்வி

கல்வி

கீதா கோபிநாத் தனது இளங்கிளை பொருளாதாரப் படிப்பினை டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் முடித்துள்ளார், பின்னர்த் தனது முதுகலைப் பட்டத்தினை டெல்லி ஸ்கூள் ஆப் எக்னாமிஸிலும், முனைவர் பட்டத்தினை அமெரிக்காவிலும் பெற்றுள்ளார். ஆனாலும் தன்னை இந்திய கலிவி முறையில் படித்தவர் என்று தான் இவர் அடையாளம் காட்டிக்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவின் முதல் பெரிய நிதி மற்றும் நாணய நெருக்கடி

இந்தியாவின் முதல் பெரிய நிதி மற்றும் நாணய நெருக்கடி

இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இலங்கலைப் பட்டம் பெற்ற போது 1990-91 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பெரிய வெளிநாட்டு நிதி மற்றும் நாணய நெருக்கடி ஏற்பட்டது என்று அவர் கூறினார். அது தான் தன்னைப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்ததாகவும், முனிவர் பட்டத்திற்காக வெளிநாடு வரை சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சான்றுகள்

சான்றுகள்

ஐவரி லீக் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராகப் பணிபுரிந்த நோபல் பரிசு பெற்ற அமர்யா சென் அடுத்து உலகளவில் மூன்றாவது பெண் மற்றும் முதல் இந்தியரான இவர் ஜான் ஸவான்ஸ்ட்ரா இண்டெர்னேஷனல் ஸ்டடிஸ் மற்றும் ஹார்வர்டிலும் பொருளாதாரத் துறையில் பேராசிரியர் ஆவார்.

நியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் பல

நியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரான போஸ்டனின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் கோபிநாத் ஒரு பார்வையாளர், அறிஞர் ஆவார்.

பொருளாதார ஆய்வின் மறுபரிசீலனை, அமெரிக்கப் பொருளாதார விமர்சனம் மற்றும் ஐஎம்எ பொருளாதார விமர்சனம் போன்று எழுத்தாளர் நிலையிலும் உள்ளார்.

 

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியில் ரகுராம் ராஜனின் பதவி கலத்தினை நீட்டிக்காததற்குத் தனது கட்டுரைகளில் இந்திய அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி குறித்துப் பெருமை படும் என்னைப் போன்றவர்களுக்கு ரகுராம் ரஜனின் பதவி கலத்தை நீட்டிக்காதது மிகப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது என்றும் கீதா கோபிநாத் கூறியிருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+