ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை நடைபெற உள்ளது. ஜியோவின் இரண்டாம் ஸ்மார்ட் பியூச்சர் போனான ஜியோ போன் 2-ல் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளும் இயங்கும்.
சென்ற ஆண்டு அறிமுகம் செய்து பியூச்சர் போனை விட ஜியோ போன் 2-க்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் போன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 41வது ஆண்டுக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தப் போனை எப்படிப் புக் செய்வது மற்றும் 200 ரூபாய் கேஷ்பேக் பெறுவது என்று இங்குப் பார்ப்போம்.
எத்தனை மணிக்கு விற்பனை?
ஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை பிற்பகல் 12 மணியளவில் தொடங்கும். இதனை வாங்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்கள் jio.com என்ற இணையதளம் சென்று புக் செய்ய வேண்டும்.
விலை என்ன? கேஷ்பேக் பெறுவது எப்படி?
ஜியோ போன் 2-ன் விலை 2,999 ரூபாய் ஆகும். ஆனால் பேடிஎம் டிஜிட்டல் வாலெட் மூலம் போனை புக் செய்யும் போது 200 ரூபாய் கேஷ்பேக் சலுகையுடன் 2,799 ரூபாய்க்கு ஜியோ போன் 2 போனை வாங்க முடியும்.
ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ போன் 2-க்காகப் பிரத்தியோகமாக 49 ரூபாய், 99 ரூபாய் மற்றும் 153 ரூபாய் என 3 ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. போனை புக் செய்த இரண்டு 5 முதல் 7 நாட்களில் டெலிவரி செய்யப்படும்.
வசதிகள்
ஜியோ போன் 2 2.4 இஞ்ச் டிஸ்ப்ளே, கைஓஎஸ், 512 ரேம், 4 ஜிபி உட்புற சேமிப்பகம், 128 ஜிபி வரையிலான எஸ்டி கார்டு செமிப்பக வசதிகளுடன் வருகிறது. மேலும் 2 மெகா பிக்செல் பின் பக்க கேமரா, எல்ஈடி பிளாஸ் லைட் வசதியும், 0.3 மெகா பிக்செல் முன்பக்க கேமராவும் உள்ளது.
செயலிகள்
ஜியோ போன் 2 வாட்ஸ்ஆப், யூடியூப், பேஸ்புக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற செயலிகளையும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது முக்கியச் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications