ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் அடைந்த பெப்ஸிகோ.. எப்படி?

உலகின் மிகப் பெரிய குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ இந்தியாவில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக லாபத்தினைப் பதிவு செய்துள்ளது.

பெப்ஸிகோ நிறுவனம் இந்தியாவில் 10 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகம் செய்து வரும் நிலையில் குளிர்பானங்கள் மற்றும் லேஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளையும் விற்று வருகிறது. மேலும் அன்மையில் நிறுவனங்களின் பதிவாளருக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் 2017-2018 நிதி ஆண்டில் 190 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து முழுமையான விவரங்களை இங்குப் பார்ப்போம்.

லாபம்

லாபம்

2017-2018 நிதி ஆண்டில் பெப்ஸிகோவின் விற்றுமுதல் 7 சதவீதம் சரிந்து இருந்தாஉம் லாபம் இரட்டிப்பாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டு இதுவே 148 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகப் பெப்ஸி தெரிவித்து இருந்தது. கடைசியாகப் பெப்ஸிகோ 2010-2011 நிதி ஆண்டில் தான் லாபத்தினைப் பதிவு செய்து இருந்தது.

 

எப்படி இந்த மாற்றம்?

எப்படி இந்த மாற்றம்?

லாபம் அளிக்கும் தயாரிப்புகளில் கவனம் செலுத்தியது, பேக்கேஜில் மாற்றம், புதுமையைப் புகுத்த, செலவைக் குறைத்தல் போன்ற காரணங்களா இந்த வளர்சியை எட்டியுள்ளதாகப் பெப்ஸிகோ இந்தியாவின் தலைமை நிதி அதிகாரி ராஜ்தீப் தத்தா கூறியுள்ளார்.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் ஏற்பட்ட பணவீக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பெப்ஸிகோவின் லாபம் சரிந்ததற்கான முக்கியக் காரணங்கள் ஆகும். இதனைச் சரி செய்யப் பெப்ஸிகோ செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதே நேரம் 2015-2018 இடைப்பட்ட காலத்தில் 80 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

வதந்திகள்

வதந்திகள்

லேஸ், குர்குகே, குவேக்ஸ், டோரிடோஸ் போன்றவை பெப்ஸிகோவின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. அது மட்டும் இல்லாமல் குர்குரேவில் பிளாஸ்டிக் கலந்து இருப்பதாகச் சமுக வலைத்தளங்களில் பரவி இவரும் வதந்திகளைத் தடுக்கும் நடவடிக்கைய்களையும் பெப்ஸிகோ எடுத்து அதில் வெற்றியும் கண்டது.

 முதன்மை வணிகம்

முதன்மை வணிகம்

பெப்ஸிகோ மற்றும் அதன் போட்டி நிறுவனமான கோகோ கோலா நிறுவனங்களின் முதன்மை தயாரிப்பான குளிர்பானங்களில் மிகப் பெரிய சந்தையை இழந்துள்ளன. மறுபக்கம் மக்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த துவங்கினர்.

பயன்படுத்திக்கொண்ட பெப்ஸி

பயன்படுத்திக்கொண்ட பெப்ஸி

இதனைச் சரியாகப் பயன்படுத்திய பெப்ஸி டிராப்பிக்கான உள்ளிட்ட பழரச குளிர்பானங்களையும் அறிமுகம் செய்தது. அது மட்டும் இல்லாமல் இந்தியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் நொறுக்கு தீனி சந்தையிலும் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று 7 வருடங்களுக்குப் பிறகு லாபத்தினைப் பதிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+