சர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கத் தயார் என்றும் ஜப்பானின் சாப்ட்பாங்க் நிறுவன தலைவர் மஷயோஷி சன் தெரிவித்துள்ளார்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்த இரண்டாம் மறு முதலீடு மாநாட்டில் பங்கேற்று பேசிய மஷயோஷி சன இந்தச் சலுகை குறித்துத் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் விவாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பயன்படுத்தப்படாமல் உள்ள நிலப்பரப்பு
இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப் பெரிய நிலப்பரப்பு சூரிய வெளிச்சத்துடன் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும், அவற்றைப் பயன்படுத்தினால் குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து விநியோகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஷயோஷி சன்
இந்தியாவில் இது போன்று 13 சதவீத நிலப்பரப்புப் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அதில் சூரிய மின்சாரம் தயாரிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி மின்சாரம் எடுக்கலாம் என்றும் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மஷயோஷி சன் குறிப்பிட்டார்.
இலவச மின்சாரம் எப்படிக் கிடைக்கும்?
மஷயோஷி சன் குறிப்பிட்டுள்ள இந்த இலவச சூரிய மின்சார சக்தி இந்தியாவிற்கு வேண்டும் என்றால் முதல் 25 ஆண்டுகளுக்கு இவர்களிடம் இருந்து சூரிய மின்சாரத்தினைக் காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தப்படும். இந்தச் சூரிய மின்சாரம் தயாரிப்புப் பணிகளுக்கு இடம் அளித்தால் மட்டும் போதும். பிற முதலீடுகளைச் சாப்ட்பாங்க் பார்த்துக்கொள்ளும். 25 ஆண்டுகளுக்கு இந்தச் சூரிய மின்சார நிலையங்கள் இந்தியாவிற்கு இலவசமாக மின்சாரம் அளிக்கும்.
1 டிரில்லியன் டாலர் முதலீடு
2030-ம் ஆண்டுக்குள் சாப்ட்பாங்க் இந்தியாவின் மாற்று எரிசக்தி திட்டங்கள் மீது 1 டிரில்லியன் டாலர் ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல முக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீதும் சாப்ட்பாங் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications