சந்தா கோச்சரின் ராஜிநாமாவை அடுத்து ஐசிஐசிஐஇ வங்கியின் அடுத்த தலைமை நிர்வாக அதிகரி பதவியினை சந்தீப் பாக்ஷின் ஏற்றுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியில் தனது பதவி காலம் முடியும் முன்பே ராஜிநாமா கடித்தத்தினை சந்தா கோச்சர் அளித்ததை அடுத்து கூடிய போர்டு இயக்குனர்கள் குழுவில் அவரை உடனடியாக வெளியேற வங்கி நிர்வாகம் அனுமதி அளித்தது. மேலும் இதனை பங்கு சந்தையிலும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது.
எனவே அடுத்து சந்தா கோச்சரின் தலைமை நிர்வாக பொருப்பினை கவனிக்க இருக்கும் சந்தீப் பாக்ஷி குறித்து இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
வீடியோகான் கடன் வழக்கு
வீடியோகான் கடன் வழக்கில் சந்தா கோச்சர் பெயர் அடிப்பட்ட போது அவருக்கு நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இடைக்காலத்தில் வங்கியின் நிர்வாகத்தினை சந்தீப் பாக்ஷி தான் கவனித்து வந்தார்.
யார் இந்த சந்தீப் பாக்ஷி?
ஐசிஐசிஐ வங்கியின் இக்காட்ட சூழல்களில் அதனை சரி செய்ய போர்டு இயக்குனர்கள் தேர்வு செய்யும் முதல் நபர் சந்தீப் பாக்ஷியாக தான் இருப்பார். 2008-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் ஏற்பட்ட சில தவறுகள் ஏற்பட்டு நெறுக்கடி வர ஐசிஐசிஐ லம்பார்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து அந்த தவறுகளை சரி செய்ய வந்தவர் தான் சந்தீப் பாக்ஷி.
முக்கிய பொறுப்புகள்
ஐசிஐசிஐ வங்கியை அந்த இக்கட்டான சூழலில் இருந்து பாக்ஷி விடுவித்ததை அடுத்து 2010-ம் ஆண்டு ஐசிஐசிஐ புரெடென்ஷியல் இன்சூரன்ஸ் பிரிவில் முக்கிய பொறுப்பினை ஏற்றார். பாக்ஷி தலைமையில் ஐசிஐசிஐ புரெடென்ஷியல் இன்சூரன்ஸ் 2018-ம் ஆண்டு 1.4 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை பெற்றது. இவர் இந்த பதவிக்கு செல்லும் போது வெறும் 57,319 கோடி ரூபாயாக இருந்தது.
ஏன் கோச்சர் இடத்தில் பாக்ஷி?
ஐசிஐசிஐ வங்கியில் 30 ஆண்டுகளாக தனது தனித்திறமையுடன் பிரகாசித்து வருபவர் தான் பாக்ஷி. 1986-ம் ஆண்டு ஐசிஐசிஐ ஒரு வளர்ந்து வரும் நிதி நிறுவனமாக இருந்த போது சேர்ந்த பாக்ஷி அது மிகப் பெரிய வங்கி நிறுவனமாக வளர்ந்து தவிற்க முடியாத நிறுவனமாக உள்ள போதும் ஒரு முக்கிய அதிகாரியாக உள்ளார்.
திறன்
கார்ப்ரேட் வங்கி சேவை, சில்லறை வங்கி சேவை, லைப் இன்சூரன்ஸ், ஜென்ரல் இன்சூரன்ஸ் என்று அனைத்து நிதி துறைகளும் தெரிந்த, அனுபவம் வாய்ந்து ஒரு நபர் தான் பாக்ஷி.
ஐசிஐசிஐஇ தவிற வேறு சிறந்த வாய்ப்பு இல்லை
ஜேம்செத்பூர் சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற சந்தீப் பாக்ஷி இது வரை ஒரு முறை கூட தேய்ந்து போகாத ஊழியராக உள்ளார். ஐசிஐசிஐ எனக்கு தேவை என்பதால் ஒவ்வொரு நாளும் நான் ஐசிஐசிஐயில் இருப்பதாக நம்புகிறேன். ஐசிஐசிஐ வங்கிக்கு என்னை போன்று 100 சந்தீப் பாக்ஷீ கிடைப்பார்கள் ஆனால் எனக்கு ஐசிஐசிஐ தவிற வேறு சிறந்த வாய்ப்பு இல்லை என்று ஒரு நேரகானலின் போது குறிப்பிட்டு இருந்தார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications