நேத்து மதியம் 2.45 வாக்குல தான் நம்ம நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்புக்காக, கலால் வரியக் குறைக்குற செய்தியச் சொன்னாரு. சரி நல்ல விஷயம். ஆனா இத எதுக்காக பண்ணாங்க, மோடி ஜியோட பிசினஸ் பிளான் என்னன்னு இதுல ஒளிஞ்சிருக்குற விஷயத்தப் பாருங்க மக்களே. தேர்தல் எல்லாம் அவருக்கு ஒரு மேட்டரே இல்லயாம். பின்ன ராகுல் காந்தி மாதிரி விளையாட்டுப் புள்ள எல்லாம் எதிர்த்துக் போட்டி யிட்டா 20 மாநிலங்கள ஆள்ற பிஜேபி எவ்வளவு விளையாட்டு காட்டும்.
செய்தி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு லிட்டருக்கு 1.5 ரூபாய் குறைக்கிறது. அதோடு மேலும் ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் சுமக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. மொத்தம் 2.5 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறையும்.மாநில அரசுகளுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி அல்லது விற்பனை வரியைக் குறைக்க வேண்டுகோள் வைத்திருக்கிறது. 12 மாநிலங்கள் தங்கள் வாட் மற்றும் விற்பனை வரிகளை குறைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரும்பாலான பாஜக ஆட்சி மாநிலங்கள்.
கணக்கு
பெட்ரோல் மீது மத்திய அரசு மட்டும் கலால் வரியாக விதிக்கும் தொகை 19.48 ரூபாய். டீசல் மீது மத்திய அரசு மட்டும் காலால் வரியாக விதிக்கும் தொகை 15.33 ரூபாய். 2017 - 18 நிதி ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்கள் மீதான கலால் வரி மட்டும் 2.3 லட்சம் கோடி வசூலித்திருக்கிறது.
நேரடி வரி வருவாய்
இரண்டு நாட்களுக்கு முன் தான் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 5.47 லட்சம் கோடி, இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் என்று அறிவித்தது. இப்போது ஓரளவுக்கு நீங்கள் யூகித்திருக்கலாம். ஆக இந்த வருடம் சுமாராக 92,000 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகி இருக்கிறது.
சரிக்கட்டுதல்
ஒரு ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து கலால் வரியைக் குறைத்தால் 6,607 கோடி ரூபாய் தான் அரசுக்கு நஷ்டம். இவர்கள் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது தலா 1.5 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். மொத்தம் மூன்று ரூபாய் என்றால் 19822 கோடி ரூபாய் வருவாய் இழப்பு தான். அதையும் நம்ம மோடிஜி வருமான வரித் துறை மூலமா 92000 கோடி கூடுதலாக வசூல் பண்ணிட்டாரே அப்புறம் என்ன..? இப்ப கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்
பாவம் மக்களே
இப்ப சொல்லுங்க, நமக்கு பெட்ரோல் டீசல் எல்லாம் கொறச்சிக் கொடுக்க மோடி என்ன லூசா இல்ல அருண் ஜெட்லி என்ன முட்டாளா... எல்லாரும் புத்திசாலிங்க தான் மக்களத் தவிர.
தவறான நேரம்
உலக சந்தையில கச்சா எண்ணெய்யோடு விலை தொடர்ந்து அதிகமாகிக் கிட்டே போகுது ஒரு பேரல் கச்சா எண்ணெயோட விலை சுமார் 86 டாலருக்கு வர்த்தகமாகுது. இப்ப தேர்தலையும், இந்த நேரடி வரி வருவாயையும் கணக்குல வெச்சிக் விலைய குறக்கிறது அவ்வளவு சரி இல்ல. திரும்பவும் மக்கள் கிட்ட தான் இந்த விலையை சேத்து வெச்சு வசூலிப்பாங்கன்னு சந்தை வல்லுநர்கள் சொல்றாங்க.
தேர்தல்
சரி நாம ஆட்சிக்கு வந்து என்ன செஞ்சாலும், அடிப்படை பொருட்களோட விலையக் கட்டுப்படுத்த முடியாத அரசுன்னு பேர் வாங்கக் கூடாது. இந்த மமாதிரி ஆட்சி முடியுற நேரத்துல அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்துல நல்ல பெயர் எடுக்க இந்த கலால் வரிய பயன்படுத்திட்டாரு. திரும்ப ஆட்சிக்கு வந்தா "பாய்யோ அவுர் பெஹனோ" ந்னு அதே டயலாக்கை போட்டு சேத்து ஏத்திப்போம், வரலன்னா, காங்கிரஸ் சாவட்டும்னு கணக்கு போட்டிருக்குறாரு போல. என்ன மூள சார்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!



Click it and Unblock the Notifications