இந்திய ரிசர்வ் வங்கி இன்று 2018-2019 நிதி ஆண்டுக்கான 4 வது நாணய கொள்கை கூட்ட முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6.50 சதவீதமாகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ஆக சரிந்த காரணத்தினால் அதனைக் கட்டுப்படுத்தவே ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்தாதற்கு காரணம். மேலும் 6 நபர்கள் கொண்ட நாணய கொள்கை உறுப்பினர்களில் பெரும்பான்மையான ஆதரவு ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தக் கூடாது என்று வாக்களித்ததும் உள்ளனர்.
ஆனால் இந்திய நிதி நிறுவனங்கள் ஆர்பிஐ இந்த முறையும் வட்டி விகிதத்தினை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்கனவே கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளன.

ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முடிவினால் வங்கிகள் கடன் திட்டங்கள் வட்டி விகித உயர்வினை குறைக்குமா அல்லது அப்படியே தொடருமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் ஆரிபிஐ 2018-2019 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் 3.8 சதவீதமாக இருக்கும் என்றும், 4-ம் காலாண்டில் 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, விவசாய பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு போன்றவையே பணவீக்கம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
2018-2019 நிதி ஆண்டுக்கான ஆர்பிஐ-ன் 5வது நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 3 முதல் 5-ம் தேதி வரையில் நடக்கும்.
ஆர்பிஐ வெளியிட்ட முழு அறிக்கை:


Click it and Unblock the Notifications