எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.. உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தை அன்மையில் மிகப் பெரிய அளவில் சரிந்த போது சிறு முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களும் ரத்த கண்ணீர் வடித்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

 

ஆம், சந்தை சரிவின் போது பல முக்கிய ப்ளூசிப் நிறுவனங்களின் சந்தை மூலதனமும் சரிந்து தேசிய அளவிலான நட்டத்தினைப் பதிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2018 ஆகஸ்ட் 28-ம் தேதி சந்தை உச்சத்தினைத் தொட்டு இருந்த போது 50.7 பில்லியன் டாலர்கள் ஆகும். அதன் பிறகு ஏற்பட்ட சந்தை சரிவில் சிக்கிய இவரின் சொத்து மதிப்புத் தற்போது 39.5 பில்லியன் டாலர்களாக உள்ளதாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 29-ம் தேதி ரிலையன்ஸின் ஒரு பங்கின் மதிப்பு 1,328.75 ரூபாயாக இருந்து வந்த நிலையில் அதன் இன்றைய மதிப்பு 1,107.95 ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர்

மற்றேறு குழு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் சந்தை மூலதனம் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது.

குமார் மங்களம் பிர்லா
 

குமார் மங்களம் பிர்லா

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்பு ஜனவரி மாதம் 9.38 பில்லியன் டாலர்களாக இருந்து வந்த நிலையில் சந்தை சூறாவளியில் சிக்கி 3.16 பில்லியன் டாலரினை இழந்து 5.91 பில்லியன் டாலரினை மட்டுமே வைத்துள்ளார்.

தங்களது 8 முக்கிய நிறுவனங்களில் இருந்து 60,000 கோடி ரூபாய் வரை சந்தௌ மூலதனத்தினைக் குமார் மங்களம் பிர்லா இழந்துள்ளார். பட்டியலிடப்பட்டுள்ள 8 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் இந்த ஆண்டில் மட்டும் 70 சதவீத சரிவினை பெற்றுள்ளன. அதிகபட்சமாக வோடாபோன் ஐடியா (23,000 கோடி), கிராசிம் இண்டஸ்ட்ரிஸ் (16,000 கோடி), அல்ட்ரா டெக் சிமெண்ட்(14,000 கோடி) உள்ளிட்டவை சந்தை மூலதனத்தினை இழந்துள்ளன.

கவுதம் அதானி

கவுதம் அதானி

அதானி குழுமம் துறைமுகங்கள், தளவாடங்கள், கப்பல் மற்றும் ரயில், நிலக்கரி சுரங்கம், மேலாண்மை மற்றும் ஆற்றல் துறைகளில் வணிகம் செய்து வரும் நிலையில் இந்த அண்டு மட்டும் 3.8 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினை இழந்துள்ளது. ஜனவரி மாதம் அதானியின் செல்வ மதிப்பு 11 பில்லியன் டாலராக இருந்து வந்த நிலையில் இன்று 6.57 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.

அதானி போர்ட்ஸ், SEZ, அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனங்கள் 40,494 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை இழந்துள்ளன.

எய்ச்சர் மோட்டார்ஸ்

எய்ச்சர் மோட்டார்ஸ்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ்சின் சந்தை மூலதனம் 4.24 பில்லியன் டாலரில் இருந்து 2.63 பில்லியன் டாலர்களாகச் சரிந்துள்ளது. இது வரை எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் 28 சதவீதம் சரிந்துள்ள நிலையில் இன்று லாபத்தினைப் பதிவு செய்துள்ளது.

பிற முக்கியக் கோடீஸ்வரர்கள்

பிற முக்கியக் கோடீஸ்வரர்கள்

விப்ரோவின் அசிம் பிரேம்ஜி, லக்‌ஷிமி மிட்டல், சன் பார்மாவின் திலீப் ஷாங்வி, ஸ்ரீ சிமெண்ட்ஸின் பென்னு கோப்பால் உள்ளிட்டவர்களின் செல்வ மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 1 முதல் 2 பில்லியன் டாலர் வரி சரிந்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

இதனைப் பார்க்கும் போது எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.. உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..? என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Not Only You! Ambani, Adani, Birla To Bled In Stock Market Selloff

Not Only You! Ambani, Adani, Birla To Bled In Stock Market Selloff
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X