சர்வேக்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு முக்கியமானது. நம்பிக்கை வாய்ந்த நுகர்வோர்கள் அதான் அதிகளவில் பொருட்களை வாங்குவது மற்றும் சேவைகளைப் பெறுவதில் ஆர்வம் செலுத்துவர். இது தான் இந்தியாவின் பொருளாதாரத்தினை உயர்த்தும் முக்கியக் காரணியாக இருக்கும்.
அதே நேரம் இந்தச் சர்வே முடிவுகள் அரசின் நிர்வாகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பதையும் வெளிப்படுத்து. 2019-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வா விருக்கும் நிலையில் ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு மோடி அரசுக்கு அளிக்கும் எச்சரிக்கை என்னவென்று இங்குப் பார்க்கலாம்.
2013-ம் ஆண்டுத் தனிநபர் பொருளாதாரம் முன்னேற்ற நிலை
2014-ம் ஆண்டுத் தேர்த்தலுக்கு முன்பு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதில் 29.1 சதவீதத்தினர் மட்டுமே அப்போதைய அரசால் தங்களது பொருளாதாரம் உயர்ந்து இருந்ததாகத் தெரிவித்து இருந்தனர். அதே நேரம் 34.4 சதவீதத்தினர் 34.4 சதவீதத்தினர் இந்த அரசால் தங்களது பொருளாதாரம் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்து இருந்தனர். இரண்டுக்கு 5.3 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. மீதம் உள்ளவர்கள் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்து இருந்தனர்.
சரி, புதிய சர்வேயின் நிலை என்ன?
2018-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பின் படி 35.2 சதவீதத்தினர் நடப்பு அரசால் தங்களது பொருளாதாரம் உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். அதே நேரம் 45.5 சதவீதத்தினைத் தங்களது பொருளாதாரம் மோசம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதில் 10.3 சதவீத வித்தியாசம் உள்ளது. 2013-ம் ஆண்டுச் சர்வேயுடன் ஒப்பிடும் போது இது மோசமான நிலை என்பது மட்டும் இல்லாமல் மோடி அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் உள்ளது.
வேலை வாய்ப்புகள்
தற்போது 54.1 சதவீதத்தினைத் தங்களது வேலை வாய்ப்புகளில் வளர்ச்சிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதே நேரம் 29 சதவீதத்தினர் வேலை வாய்ப்பு நிலை மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே 2013-ம் ஆண்டு வெளியான சர்வேயில் 45.1 சதவீதத்தினர் வளர்ச்சிகள் இருந்ததாகவும், 24.9 சதவீதத்தினை மோசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இது நடப்பு அரசுக்குச் சரியான அறிகுறி அல்ல. வேலை வாய்ப்புகள் வளர்ச்சியில் அரசு அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.
வருமானம்
2013-ம் ஆண்டுச் சர்வேயில் 30.9 சதவீதத்தினர் தங்களது வருவாய் அதிகரித்துள்ளதாகவும், 15.5 சதவீதத்தினர் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர். இதுவே செப்டம்பர் 2018 சர்வேயில் 28.3 சதவீதத்தினர் மட்டும் தங்களது வருவாய் அதிகரித்துள்ளதாகவும், 23.4 சதவீதத்தினர் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
2013-ம் ஆண்டு 37.2 சதவீதத்தினை மட்டுமே வரும் நாட்களில் தங்களது சம்பளம் அதிகரிக்கும் என்று கூறிய நிலையில் நடப்பு ஆண்டு 51.3 சதவீதத்தினை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
பணவீக்கம்
2018ம் ஆண்டின் செப்டம்பர் மாத பணவீக்கம் 2013-ம் ஆண்டினை விடச் சிறந்த நிலையில் உள்ளது பொருளாதாரத்திற்குச் சாதகமாக உள்ளது. இந்தச் சர்வே முடிவுகள் 6 மெட்ரோ நகரங்களில் இருந்து எடுக்கப்பட்டு வெளியான தகவல் ஆகும். இதனை நாடு முழுவதும் எடுத்து இருந்தால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ள இடங்களில் மோடி அரசுக்கு எதிரான கருத்துக்கள் அதிகளவில் இருந்து இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு சராசரி
ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்புச் சராசரியில் நடப்பு அரசுக்கு 94.8 சதவீதத்தினர் ஆதரவு அளித்து இருந்த நிலையில் 2013-ம் ஆண்டு 91.6 சதவீத நபர்கள் அப்போதைய அரசுக்கு ஆதரவு அளித்து இருந்தனர்.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது நடப்பு அரசு மீது மக்களுக்கு வருங்காலம் குறித்த நம்பிக்கை அதிகரித்து உள்ள போதிலும் நடப்பு சூழல் மோசமாக உள்ளதை எச்சரிக்கை மணியாகக் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications