வாகன பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. 2 சக்கர வாகனங்கள் விலை ஏறப்போகும் அபாயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரும் ஆண்டிற்குள் இரு சக்கர வாகனங்கள் விலை கடுமையாக ஏற போக்குகிறது எனச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அதுவும் 4 அல்லது 5% அல்ல இப்போது இருப்பதை விட 10-25% வரை விலை உயரப்போகிறதாம்.

 

இந்த விலையேற்றம் குறிப்பாக மக்கள் எந்த ரக வாகனத்தை அதிகம் விரும்பிகிறார்களோ அவற்றின் விலை ஏற போக்குதாம். தற்போதே வாகனங்களின் விலை அதிகம் தான் அது போகப் பெட்ரோல் விற்கும் விலைக்குச் சொல்லவே வேண்டாம்.

விழாக்காலச் சலுகைகள்

விழாக்காலச் சலுகைகள்

விழாக் காலச் சலுகைகளை இரண்டு சக்கர வாகன டீலர்கள் அறிவித்து வரும் நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்களின் இந்த விலை ஏற்ற முடிவு வாடிக்கையாளர்களை அச்சம் அடையச் செய்துள்ளது.

ஹோண்டா

ஹோண்டா

எதிர்பாராதவிதமாக, இந்த விலையேற்றம் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக இருக்கும். குறிப்பாகக் கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு இரு சக்கர வாகனங்களின் விலையும் 5% மேல் ஏற்றப்பட்டதில்லை. ஹோண்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில் 2020 மேல் இருசக்கர வன்கணங்களின் விற்பனை சரியும் எனக் கூறியுள்ளார். இதனால் விற்கும் விலைக்குச் மக்களைச் சமாதானப்படுத்தி வாங்க வைப்பது பெரிய போராட்டம் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காப்பீடு
 

காப்பீடு

ஆனால் விலை ஏற்றத்திற்கும் தகுந்த கரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று தற்போது வாங்கும் அணைத்து வாகனங்களுக்கும் 5 வருடம் கட்டாயமாகக் காப்பீடு செய்ய வேண்டும். முன்பு முதலில் ஒரு வருடத்திற்குச் செய்தால் போதும்.

 பிரேக்

பிரேக்

அது போக உற்பத்தி செலவும் கூடப் போகிறது ஏன் என்றால் புதுப் பிரேக் சிஸ்டேம்களை மாற்றப்போகிறார்கள், anti braking system(ABS) அல்லது combined braking system(CBS). இதையடுத்து வாகனத்தின் என்ஜின்களை BS 4 இல் இருந்து BS 5 மற்றும் 6 ஆகா மாற்றப்போகிறார்கள், இதனால் ஒரு வண்டிக்கு 4,000 முதல் 7,000 வரை விலை உயரும். இது 2020-ல் நடைமுறைக்கு வரும்.

விற்பனை சரியும்

விற்பனை சரியும்

வல்லுநர்கள் கூறுகையில் இந்த முறை விலையேற்றத்தின் காரணமாக இருசக்கர வாகனங்களின் விற்பனை குறையும் மற்றும் அடுத்து இரண்டு வருடத்தில் சரியும் அது மட்டும் இல்லாமல் வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்தி அளவும் குறையும் எனக் கூறியுள்ளனர்.

 ஹீரோ

ஹீரோ

உதாரணத்திற்கு ஹீரோ டீலக்ஸ் i3 எனும் வாகனம் கடந்த ஆகஸ்ட் வரை 49,050 ரூபாய்க்கு விற்கப்பட்டது ஆனால் தற்போது அதன் விலை 51,615 இதற்கு முக்கியக் காரணம் காப்பீட்டின் விலை ஏற்றம். இப்போது இதே வாகனத்திற்கு CBS பிரேக் மற்றும் BS 6 என்ஜின் பொருத்தினால் இதன் விலை சுமார் 57,115 ஆக உயரும். அதே சமயத்தில் ஹோண்டா ஆக்டிவா-வின் விலை 15% மற்றும் பஜாஜ் பல்சர் விலை 18% உயரும்.

விற்பனை உயர்வு

விற்பனை உயர்வு

2017-2018 காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 15% உயர்ந்துள்ளது ஆனால் விற்பனை வேகம் சரிவை சந்தித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் 6.7% கடந்த ஆண்டை விட அதிகமாகி உள்ளது எனத் தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து ஏறும் பெட்ரோல் விலை மற்றும் காப்பீடு விலை ஏற்றதால் கடந்த இரண்டு மாதத்தில் வாகன விற்பனை சரிந்துள்ளது.

மூலப்பொருட்கள் விலை உயர்வு

மூலப்பொருட்கள் விலை உயர்வு

வாகன உற்பத்திக்குத் தேவையான இரும்பு மற்றும் பிளாஸ்டிக் விலை ஏற்றதால் வாகனங்களின் விலை உயர்கிறது. அதை வாடிக்கையாளர்கள் ஏற்க வேண்டியதாகிறது. குறைந்த காலத்தில் அதிக விலை ஏற்றதால் உற்பத்தியாளர்களும் தகுந்த விலைக்கு வாகனங்களை விற்று லாபம் பார்க்க சிரமப்படுகிறார்களாம்.

 ஹீரோ & ஹோண்டா

ஹீரோ & ஹோண்டா

இருசக்கர விற்பனையில் ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் விலையேற்றம் ராயல் என்ஃபீல்டு மற்றும் பஜாஜ் ஆட்டோவை விட மிக அதிகமாக உள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் சார்பாகக் குறிப்பிடுகையில் காப்பீட்டின் விலை ஏற்றம் காரணமாகத் தங்களின் வாகனங்கள் விலை 6% வரை உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bike prices to be hiked again

Bike prices to be hiked again
Story first published: Wednesday, October 10, 2018, 11:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X