மீண்டும் 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்றும் காக்னிசென்ட்!

புதிய தொழில்நுட்பங்கள் திறன் இல்லா 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்ற இருப்பதாகக் காக்னிசென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களை வெளியேற்ற மட்டும் 35 மில்லியன் டாலரினை இழப்பீடாக அளிக்க முடிவு காக்னிசென்ட் முடிவு செய்துள்ளது.

சென்ற வருடமும் இதே போன்று 400 மூத்த ஊழியர்களைக் காக்னிசெண்ட் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியேறுமாறும் நேரடியாகக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நீக்கப்படும் ஊழியர்கள்

நீக்கப்படும் ஊழியர்கள்

காக்னிசென்ட் நிறுவனத்தின் தொழிலாளர் மேலாண்மை பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில் தங்களது வணிக இலக்குகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்ய முடியாத ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாகக் காக்னிசென்ட் தெரிவித்துள்ளது.

 புதிய ஊழியர்கள் பணிக்கு எடுக்க வாய்ப்பு

புதிய ஊழியர்கள் பணிக்கு எடுக்க வாய்ப்பு

இந்த ஊழியர்களை வெளியேற்றும் அதே நேரம் புதியதாகத் தங்களுக்குத் தேவையான திறன் படைத்த ஊழியர்களைப் பணிக்கு எடுக்க உள்ளதாகவும் காக்னிசென்ட் தெரிவித்துள்ளது.

 இழப்பீடு

இழப்பீடு

வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது என்ற விவரங்கள் மற்றும் ஊழியர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புதிய பொறுப்புகள்

புதிய பொறுப்புகள்

தலைமை பணிகளில் உள்ள திறன் அல்லாதவர்களை வெளியேற்றி அது யாரிடம் உள்ளதோ அவர்களுக்கு வாய்ப்புகளை அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றும் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவரான ராஜ் மேத்தா தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

சர்வதேச அளவில் இந்தப் பணி நீக்க நடவடிக்கைகளைக் காக்னிசென்ட் எடுத்து வருவதாகவும் அதே நேரம் 2வது காலாண்டில் நிறுவனத்தில் புதியதாக 7,500 நபர்களைப் பணிக்கு எடுத்து மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,68,900 நபர்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர ஒத்துழைப்பு

பரஸ்பர ஒத்துழைப்பு

வெளியேற்றப்படும் ஊழியர்கள் வெளியில் சென்று எந்தப் பிரச்சனையும் செய்யக் கூடாது என்பதற்காகப் பரஸ்பரமாக இழப்பீட்டினை அளித்து வெளியேற்றப்படுவார்கள் என்று காக்னிசென்ட் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+