70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு!

உலகின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு 11 பில்லியன் டாலர் மதிப்பிலான மறு கட்டமைப்பு பணிகளைச் செய்ய இருப்பதாகவும் அதனால் 70,000 ஊழியர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோக வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மார்கன் ஸ்டான்லி

மார்கன் ஸ்டான்லி

மார்கன் ஸ்டானிலி நிறுவனமானது ஃபோர்டு நிறுவனத்தில் சர்வதேச அளவில் 2,02,000 ஊழியர்கள் உள்ளதாகவும் அதில் குறைந்தது 20,000 ஊழியர்களை வெளியேற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

விளக்கம் இல்லை

விளக்கம் இல்லை

ஃபோர்டு நிறுவனம் இது நிதி குறைபாட்டிற்காக எடுத்த முடிவா அல்லது ஏதேனும் திட்டங்களில் ஏற்பட்ட தோல்வியின் விளைவா என்பதை விளக்கவில்லை.

மறு கட்டமைப்பு

மறு கட்டமைப்பு

இது குறித்து ஃபோர்டு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான கரேன் ஹாம்ப்டனிடம் கேட்ட போது நிர்வாகத்தினை மறு கட்டமைப்பு செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஊழியர்களைக் குறைக்கும் முடிவு தவிர்க முடியாத ஒன்றாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஃபோர்டு

ஃபோர்டு

அமெரிக்காவின் இரண்டாம் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு 2018-ம் ஆண்டுக்கான லாப எதிர்பார்ப்பினை குறைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான கட்டமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளதால் செப்டம்பர் மாதம் முதலீட்டாளர் கூட்டத்தினை ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜிம் ஹேக்கட் தவிர்த்துள்ளார்.

சரிவு

சரிவு

ஃபோர்டு நிறுவனம் பல மாடல் கார் ரகங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் சென்ற மாதம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயாட்டா மோட்டோ கார்ப் வாகனங்களை விடக் குறைந்த அளவில் மட்டுமே விற்பனை செய்துள்ளது. பங்குகளும் 27 சதவீதம் வரை சரிந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் லாபம் 1.07 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+