சர்வதேச அளவில் புதன்கிழமை ஏற்பட்ட சந்தை சரிவினால் உலகின் டாப் 500 கோடிஸ்வரர்கள் 99 பில்லியன் டாலர்வரை தங்களது சொத்து மதிப்பினை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தரவுகள் கூறுகின்றன.
ஜெப் பிசோஸ்
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் மற்றும் அமேசான் நிறுவன தலைவரான ஜெப் பிசோஸின் சொத்து மதிப்பு மட்டும் ஒரே இரவில் 9.1 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் அமேசான் நிறுவனத்திற்கு இதுவே மிகப் பெரிய சரிவாகும். இதனால் ஜெப் பிசோஸின் மொத்த செல்வ மதிப்பு 145.2 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
பெர்னார்ட் அர்னால்ட்
ஐரோப்பிய பில்லியனரான பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் சரிந்து 66.9 பில்லியன் டாலராக உள்ளது. இந்த வருடம் பெர்னார்ட் அர்னால்ட் பெற்ற லாபத்தில் பாதியை இந்தச் சந்தை சரிவில் இழந்துள்ளார்.
வாரன் பஃபெட், பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க்
வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் 4.5 பில்லியன் டாலர் சரிவினை பெற்றுள்ளது.
பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் என உலகின் டாப் 67 பில்லியனர்களின் சொத்து மதிப்பு ஒரே இரவில் 32.1 பில்லியன் டாலர் வரை சரிந்துள்ளது.
அமெரிக்கப் பில்லியனர்கள்
உலக நாடுகளுக்கு இடையில் ஒப்பிடும் போது அமெரிக்கப் பில்லியனர்களின் செல்வ மதிப்பு 54.5 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்தச் சர்வதேச சந்தை சரிவில் இந்திய நிறுவனங்களும் 3.44 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்புகளைச் சந்தித்துள்ளனர் எனத் தரவுகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications