மகாராஷ்டிரா மாநிலத்தின் தொழிலாளர்களின் காப்பீட்டு நிறுவனத்தின் ஈஎஸ்ஐ நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு அனில் அம்பானியின் ரிலிஅயன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவத்திற்குக் கிடைத்துள்ளது.
இந்தத் திட்டம் எங்களுக்குக் கிடைத்திருப்பதற்கு நாங்கள் பெருமை அடைவதாகவும், இது எங்கள் வலுவான முதலீட்டுச் செயல்பாடுகள் மற்றும் நிலையான வருவாய் வழங்கும் பதிவிற்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் ரிலையன்ஸ் நிப்பான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தீப் ஷிக்கா தெரிவித்துள்ளார்.
ஏலம்
ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மகாராஷ்டிரா அரசு விடுத்த ஏலத்தில் பங்கேற்று இந்த 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழியர்கள் காப்பீடு திட்டத்தினைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் ஊழியர்கள் காப்பீட்டு நிறுவனம் நிதியில் 2017-ம் ஆண்டு வரை 59,382 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு நிறுவனம்
ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிட்டல் மற்றும் ஜப்பானின் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும்.
மொத்த சொத்து மதிப்பு
ஜூலை மாதம் வரையில் ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 4.10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
பிற முக்கியத் திட்டங்கள்
மகாராஷ்டிராவின் ஊழியர்கள் காப்பீடு மட்டும் இல்லாமல் எம்ப்லாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் ஆர்கனைசேசன், கோல் மைன்ஸ் பிராவிடண்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன் மற்றும் பென்சன் ஃபண்ட் ரெகுலேட்டரி டெவலப்மெண்ட் அதாரிட்டி ஆகிய நிறுவனங்களின் நிதியையும் ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனமே நிர்வகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications