கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு இணையத் தேடல் மற்றும் பிராந்திய மொழிகளில் விளம்பரம் செய்வதன் மூலம் 2017-2018 நிதி ஆண்டில் அதன் வருவாய் 29 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
கூகுள் இந்தியாவின் மொத்த வருவாயில் 69 சதவீதம் விளம்பரத்தில் இருந்து மட்டுமே வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வருவாய்
2017-2018 நிதி ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் வருவாய் 9,337.7 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 7,239.5 கோடி ரூபாயாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது. இந்த 2017-2018 நிதி ஆண்டின் வருவாய் வளர்ச்சியானது 2016-2017 நிதி ஆண்டினை விட 22 சதவீதம் அதிகமாகும்.
2013-2014 நிதி ஆண்டுகளை விடக் கூகுள் நிறுவனத்தின் இந்திய வருவாய் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.
லாபம்
கூகுள் நிறுவனத்தின் நிகர லாபம் 306.6 கோடி ரூபாயிலிருந்து 33 சதவீதம் அதிகரித்து 407.2 கோடி ரூபாயாக உள்ளது.
செலவு
வருவாய் அதிகரித்த அதே நேரம் கூகுள் இந்தியாவின் செலவு 29 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2016-2017 நிதி ஆண்டில் 6,760.4 கோடி ரூபாய் செலவு செய்த கூகுள் இந்தியா 2017-2018 நிதி ஆண்டில் 8,710.9 கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளது.
கவனம்
கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாத பிற பயனர்களை ஈர்க்க வேண்டும் எண்ணத்தில் இந்தியாவின் பிற பிராந்திய மொழிகளின் சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்
கூகுள் நிறுவனம் தற்போது தமிழ், வாங்கலாம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தங்களது விளம்பர சேவையினை அளித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் பிற மொழிகளில் விளம்பர சேவை விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications