பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ கணக்கில் நெட் பாங்கிங் சேவையினைப் பயன்படுத்தி வருகிறீர்களா? 2018 டிசம்பர் 1-ம் தேதிக்குள் வங்கியில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
ஒருவேலை மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால் டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு எஸ்பிஐ இணையதள வங்கி சேவை துண்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆர்பிஐ
2017-ம் ஆண்டு ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றும், வேண்டும் என்றால் மின்னஞ்சல் முகவரியையும் கண்டிப்பாகப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
யாரெல்லாம் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்?
எஸ்பிஐ-ன் ‘onlinesbi' வங்கி சேவையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால் வங்கி கிளைக்குச் சென்று 01.12.2018-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இது தற்போது வரை இணையதள வங்கி சேவையில் மொபைல் எண்ணைப் பதியாதவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, எஸ்பிஐ இணையதள வங்கி சேவை மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வது எப்படி?
உள்நுழைதல்
எஸ்பிஐ வங்கியின் www.onlinesbi.com என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் இணையதள வங்கி சேவையினைப் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
தனிநபர் விவரங்கள்
பின்னர் எனது கணக்கு ('My Account and Profile') என்பதைத் தேர்வு செய்தி அதில் தனிநபர் விவரங்கள்/மொபைல் (Personal Details/Mobile) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
மொபைல் எண் பதிவை சரிபார்த்தல்
அப்போது ப்ரோபைல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். இந்த விவரங்களை அளித்த பிறகு அங்கு மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம்.
ஒருவேலை உங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அங்கு இல்லை என்ற போது வங்கி கிளைக்குச் சென்று இந்த விவரங்களைச் சமர்ப்பித்துப் பதிவு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications