மூன்றாம் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியதை அடுத்து மத்திய அரசு ஜிபிஎப் மீதான வட்டி விகிதத்தினை 0.4 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளனர்.
இதனால் ஜிபிஎப் திட்டத்தில் உள்ளவர்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 7.6 சதவீதமாக இருந்து வந்த வட்டி விகிதம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஜிபிஎப் என்றால் என்ன?
அரசு ஊழியர்கள் பதவி உயர்வு அல்லது ஓய்வு பெறும் போது அவர்களுக்கு அளிப்பதற்காக அளிக்கப்படுவதே திரட்டப்படுவதே இந்த ஜிபிஎப் எனப்படும் பொதுச் சேமநல நிதி திட்டமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த ஜிபிஎப் தொகை நன்மை வழங்கப்பட்டு வருகிறது.
அறிவிப்பு
மத்திய பொருளாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் 2018-2019 நிதி ஆண்டில் ஜிபிஎப் சேவை பெறுபவர்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இது அக்டோபர் 1 முதல் 2018 டிசம்பர் 31 வரை மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடன்
ஜிபிஎப் கீழ் அரசு ஊழியர்களுக்கு அவசர தேவையினைப் போது கடன் அளிக்கப்படும். இது அரசு ஊழியர்களுக்கான வட்டியிலான கடன் திட்டமாகும்.
நன்மை பெறுபவர்கள்
மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள்.
சிறு சேமிப்புத் திட்டங்கள்
மத்திய அரசு தேசிய சேமிப்புப் பத்திரம், பிபிஎப் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினையும் 2018 அக்டோபர் 1 முதல் 2018 டிசம்பர் 31 வரை உயர்த்தி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications