இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான இன்போசிஸ் 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினை இன்று வெளியிட்டது. அதில் சென்ற நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டினை விட 13.8 சதவீதம் லாபம் அதிகரித்து 4,110 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் வல்லுநர்கள் 4,048.5 கோடி ரூபாய் லாபம் பெறும் என்று கணித்து இருந்தனர்.
வருவாய்
2018-2019 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் இன்போசிஸ் 21,348 கோடி ரூபாய் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது. இதுவே ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இன்போசிஸ் 19,584 கோடி ரூபாய் வருவாய் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
செலவுகள்
வருவாய் மற்றும் லாபம் அதிகரித்த அதே நேரம் இன்போசிஸ் நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்து 15,715 கோடி ரூபாயாக உள்ளது. முதல் காலாண்டில் இன்போசிஸின் செலவு 14,861 கோடி ரூபாயாக இருந்தது.
வரிக்கு முன் மற்றும் பின்
இன்போசிஸ் நிறுவனம் வரிக்கு முன் 5,633 கோடி ரூபாய் லாபம் பெற்று இருந்த நிலையில் வரி செலுத்திய பிறகு 4,110 கோடியாகப் பதிவு செய்துள்ளது.
பங்குகள் மீதான வருவாய்
இன்போசிஸ் நிறுவனத்தின் 5 ரூபாய் மதிப்பிலான ஒரு பங்கின் வருவாய் 9.45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முதல் காலாண்டில் 8.31 கோடி ரூபாயாக இருந்தது.
ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய்
இன்போசிஸ் நிறுவனத்தில் இரண்டாம் காலாண்டில் 7,834 ஊழியர்கள் பதியதாகச் சேர்க்கப்பட்ட நிலையில் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 2,17,739 நபர்களாக உள்ளனர். அதே நேரம் நிறுவனத்தில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 11,887 ஆக உள்ளது.
தனி ஒரு ஊழியரிடம் இருந்து 54.7 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இன்போசிஸ் வருவாயாகப் பெற்றுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications