ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஜியோ வெற்றியைத் தொடர்ந்து அதிவேக இணையதளச் சேவையினை அளிக்க உள்ள நிலையில் விரைவில் ஹாத்வே மற்றும் டென் நெட்வொர்க்ஸ் நிறுவனங்களின் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்க துடிப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து நேரடியாக விவரங்கள் அறிந்தவர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் 25 சதவீதத்திற்கும் கூடுதலான பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹாத்வே மற்றும் டென் நெட்வொர்க்ஸ் பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வாங்குவது குறித்த அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்த நிறுவனங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள முயன்ற போது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
பங்குகள் மதிப்பு உயர்வு
ஹாத்வே கேபிள் நிறுவனம் ரஹேஜா குழுமம், டென் நெட்வொர்க்ஸை சமீர் மஞ்சுண்டா தலைமை கீழும் இயங்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க இருப்பதாக அறிவிப்புகள் வந்த உடன் பங்குகளின் மதிப்பும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டீல் முடிந்த உடன் ஹாத்வே கேபிள் மற்றும் டென் நெட்வொர்க்ஸ் நிறுவனங்கள் இரண்டும் புதியதாகப் பங்குகளைச் சந்தையில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹாத்வே மற்றும் டென் நெட்வொர்க்ஸ் நிறுவனங்களிடம் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளையும் அதே நேரம் 50 சதவீதத்திற்கும் குறைவாகவும் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றும், மேலும் இந்த இரண்டு நிறுவனங்களின் போர்டு தலைவர்களின் முக்கியப் பொறுப்பினையும் ரிலையன்ஸ் கேட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
பிராட்பேண்ட் சந்தை
இந்திய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் சந்தையில் 52 சதவீதத்தினை ஹாத்வே வைத்துள்ளது. அதே நேரம் டென் நெட்வொர்க்ஸிடம் 1,06,000 பிடாட்பேண்ட் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இரண்டு நிறுவனங்களையும் ரிலையன்ஸ் கைப்பற்றும் போது ஜியோவின் பிராட்பேண்ட் சேவைக்கு மிகப் பெரிய வாடிக்கையாளர்களை அளிக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் பிரிவின் முக்கியப் பொறுப்புகளில் ஹாத்வே மற்றும் டென் நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் முன்னாள் தலைவர்களான கே ஜெயராமன் மற்றும் எஸ் என் சர்மா உள்ளிட்டோர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications