வணிகர்கள் இ-வே பில் முறையில் மோசடிகள் செய்து வருவதைக் கண்டறிந்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன் பேரில் இனி மோசடி செய்து வரி ஏய்ப்புச் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வணிகர்கள் இ-வே பில்லை புக் செய்த சில மணி நேரங்களில் அதனை வணிகர்கள் ரத்துச் செய்து வருவதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தது.
மோசடி
தினமும் 15 லட்சத்திற்கும் அதிகமான இ-வே பில் உருவாக்கப்பட்டு வந்த நிலையில் அதில் 1 லட்சம் பில்களைத் தொடர்ந்து சில மோசடி வணிகர்கள் ரத்துச் செய்து வந்துள்ளனர்.
உத்தரவு
இதனை அறிந்த மத்திய அரசு தேசிய தகவல் மையம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (ஜிஎஸ்சிடிஎன்) குழுக்களிடம் இது போன்று உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து அடைக்குமாறு உத்தரவிட்டது.
மோசடி பட்டியல்
அதன் படி ஜிஎஸ்டிஎன் அமைப்பு இப்படி மோசடி செய்த சில வணிகர்களின் விவரங்களைக் கண்டறிந்து அவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது.
மத்திய அரசு
இப்படி இ-வே பில் சேவையில் மோசடியில் ஈடுபட்டுள்ள பட்டிலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு அந்த வணிகர்கள் மீது அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இது போன்ற குளறுபடிகள் நடைபெறாத படி ஜிஎஸ்டிஎன் அமைப்பில் மாற்றத்தினையும் கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications