பெங்களூரு: நாம் வெளிநாடுகளில் பறந்துகொண்டே வானில் அமர்ந்தபடி சாப்பிடக்கூடிய ரெஸ்டாரண்ட்கள் உள்ளன என்று கேள்விப்பட்டு இருப்போம்.
அப்படி ஒரு ரெஸ்டாரண்ட்டினை இந்தியாவில் முதன் முறையாகப் பெங்களூருவில் திறந்துள்ளார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
பெங்களூருவில் எங்கு?
பெங்களுரு மான்யாத்தா டெக் பார்க், நாகர்வரா ஏரி மற்றும் பெங்களூருவின் அழகு இவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு 160 அடி உயரத்தில் அமர்ந்துகொண்டு உணவு அருந்தும்படி இந்த ரெஸ்டாரண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
பயம் வேண்டாம்?
அதிக உயரும் சென்றால் பயம் என்று கூறுபவர்களுக்கு இது ஒரு மகத்தான அனுபவத்தினை அளிக்கிறது. மேலே சென்று உணவு அருந்தும் போது தப்பித்தவறி கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக உங்களை இறுக்கி கட்டிக்கொள்ளக் கூடிய பெல்ட் பொருத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பாக மேலே சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம்.
என்ன சாப்பாடு எல்லாம் கிடைக்கும்?
இங்குச் சுடச்சுட சமைத்து உடனே உணவுகள் பரிமாறப்படுவதில்லை. ஏற்கனவே சமைத்து சூடாக வைக்கப்பட்டுள்ள உணவுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. கிரில் சிக்கன், காய் கறி, சாதம், பழங்கள், மாக் டெயில் போன்ற குறிப்பிட்ட சில வகையான உணவுகள் மட்டுமே கிடைக்கிறது.
யாருக்கெல்லாம் அனுமதி கிடையாது?
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் (13-14 வயதுக்குட்பட்டவர்கள்) எல்லாம் இந்த ரெஸ்டாரண்ட்டில் அனுமதிக்கப்படுவதில்லை. குறைந்தது 4.5 அடி உயரம் இருந்தால் மட்டுமே பறக்கும் ரெஸ்டாரண்ட்டில் உணவு அருந்த முடியும்.
உணவின் விலை என்ன?
முன்கேட்டியே இந்த ரெஸ்டாரண்ட்டில் புக் செய்த பிறகு சென்று சாப்பிட முடியும். சிறப்பான சாப்பாடு ஒருவருக்கு 3,999 ரூபாய். இதுவே டின்னர் என்றால் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 6,999 ரூபாய் கட்டணம் ஆகும்.


Click it and Unblock the Notifications