இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனமான டாடா குழுமம் நட்டத்தில் இயங்கி வரும் ஜெட் ஏர்வேஸின் முக்கியப் பங்குகளை வாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
நட்டம் மற்றும் கடன் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் அளிக்க முடியாமல் ஜெட் ஏர்வ்வேஸ் தினறி வருகிறது. எனவே பங்கு சந்தை மூலம் முதலீடுகளைத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
டாடா குழுமம்
டாடா குழுமம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தாலும் நிர்வாகத்தினைத் தங்களது பொறுப்பில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
டாடா ஏவியேஷன்
இந்தியாவின் முக்கிய விமானச் சேவைகளான ஏர்ஏசியா, விஸ்தரா போன்ற விமான நிறுவனங்களின் இந்திய சேவையினை நிர்வகித்து வரும் டாடா குழுமத்திற்கு ஒரு காலத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனமும் சொந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா விமான நிறுவனத்தினை வாங்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில் டாடா குழுமம் பிற விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமான சேவையினை வழங்கி வருகிறது.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. எத்தியாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஜெட் ஏர்வேசில் 35 மில்லியன் டாலர் மதிப்புடைய 24 சதவீத பங்குகள் உள்ள நிலையில் நீண்ட நாட்களாகவே வெளியேறத் துடித்து வருகிறது.
எத்தியாட் ஏர்வேஸ்
டாடா குழுமம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்க முடிவு செய்தால் அதில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் எதியாட் ஏர்வேஸ்க்கு சொந்தமான பங்குகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல் இந்த இணைவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
இண்டிகோ
அதே நேரம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் லாபம் அளித்து வரும் இண்டிகோவின் முன்னாள் தலைவரான ஆதித்யா கோஷிடம் டாடா குழுமத்தின் விமான வணிகங்களை நிர்வகிக்கும் பணிகள் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
டாடா குழும தலைவர் என் சந்திரசேகரனின் முடிவுகளுக்கு நரேஷ் கோயல் செவி சாய்ப்பாரா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications