ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்பிளிக்ஸ் அமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்திய சந்தையில் குறைந்த விலையில் தங்களது சேவையினை அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த மூலம் தங்களது வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும் என்று கருதுவதாகத் தமிழ் குட்ரிட்டார்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
விலை குறைப்பு
இந்திய சந்தையில் நெட்பிளிக்ஸ்க்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருந்தாலும் அதிக விலை என்பதால் குறைந்த அளவிலான சந்தாதார்களே உள்ளனர். இந்த விலையில் தொடர்ந்து சேவை வழங்கும் போது வளர்ச்சி வேகமாக இருக்காது.
எனவே புதிய விலை மாதிரிகளை அறிமுகம் செய்து இந்திய வாடிக்கையாளர்களைக் கவர இருக்கிறோம் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியான ஜார்ஜ் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மாத சந்தா
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மாத சந்த தற்போது 500 ரூபாயாக உள்ளது. இதுவே போட்டி நிறுவனங்களின் ஆண்டுச் சந்தாவே 500 முதல் 600 ரூபாய்க்குள் உள்ளது. இது தங்களது வளர்ச்சிக்குப் பாதிப்பாக உள்ளதாக நெட்பிளிக்க்ஸ் கருதுவதால் இந்த விலை குறைப்பு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள்
தற்போது இந்திய ஆன்லைன் வீடியோ ஸ்டீரிமிங் சேவையில் ஹாட் ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ என இரண்டு நிறுவனங்களிடம் தான் மிகப் பெரிய சந்தை உள்ளது. அதனை நெட்பிளிக்ஸ் பிரித்து எடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அமேசான் மற்றும் ஹாட்ஸ்டாரில் இந்திய திரைப்படங்கள் அதிகளவில் உள்ள நிலையில் நெட்பிளிக்ஸிடம் ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே உள்ளது என்பது பாதகமாக உள்ளது.
இந்திய உள்ளடக்கங்கள்
அதனால் விரைவில் இந்திய உள்ளடக்கங்களைக் கொண்ட ஆன்லைன் தொடர்களையும் வெளியிடலாமா என்றும் நெட்பிளிக்ஸ் விவாதித்து வருகிறது.
மொத்த சந்தாதார்கள்
2018 செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்துள்ள காலாண்டில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் அமெரிக்கா இல்லாமல் 5.1 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். மொத்தமாக 130 மில்லியன் சந்தார்கள் நெட்பிளிக்ஸ் வசம் உள்ளனர் என்றும் தரவுகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications