ரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!

ரிலையன்ஸ் ஜியோ தீபாவளியை முன்னிட்டி 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு 547.5 ஜிபி இணையதளத் தரவு மற்றும் இலவச குரல் அழைப்பு சேவைகளைப் பெறக்கூடிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஒரு வருட தரவு திட்டத்தினை ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக இணையதளம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் இலவச குரல் அழைப்புகள், ஜியோ செயலிகளாக ஜியோ மியூசிக், ஜியோ டிவி மற்றும் பிறவற்றையும் இலவசமாகப் பயன்படுத்தி மகிழலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பிற முக்கிய ரீசார்ஜ் திட்டங்கள்

பிற முக்கிய ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோ இணையதளம் மற்றும் ஜியோ மனி செயலி மூலம் இந்த 1,699 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தினை ரீசார்ஜ் செய்ய முடியும். அது மட்டும் இல்லாமல் தினசரி தரவு வரம்பு ஏதுமின்றிப் பயன்படுத்தும் வகையில் 4,999 ரூபாய் மற்றும் 9,999 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களையும் வெளியிட்டுள்ளனர்.

கேஷ்பேக் சலுகை

கேஷ்பேக் சலுகை

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் 100 ரூபாய்க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது அவர்களுக்கு 100 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. ர்னவே 149 ரூபாய், 198 ரூபாய், 299 ரூபாய், 349 ரூபாய், 398 ரூபாய், 448 ரூபாய், 449 ரூபாய், 509 ரூபாய், 799 ரூபாய், 999 ரூபாய், 1699 ரூபாய், 4,999 ரூபாய், மற்றும் 9,999 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களுக்குக் கேஷ்பேக் சலுகைகள் பெற முடியும்.

சலுகைகள் எங்கு எல்லாம் கிடைக்கும்

சலுகைகள் எங்கு எல்லாம் கிடைக்கும்

ஜியோ இணையதளம், செயலி, ரீடெய்லர்கள் என அனைத்து இடங்களிலும் ஜியோ ரீசார்ஜ் செய்யும் போது இந்தச் சலுகைகள் கிடைக்கும். இந்தக் கேஷ்பேக் சலுகைகள் கூப்பன் மூலம் அளிக்கப்படுவதால் 509 ரூபாய் ஒரு முறை பயன்படுத்த கூடியதாகவும், 799 ரூபாய் கூப்பன் எத்தனை முறை வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்யும் படியும் அளிக்க உள்ளனர்.

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் அளிக்கும் இந்தக் கூப்பன்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கும் போது சமர்ப்பிக்க முடியும். ஆனால் ஒரு முறைக்கு ஒரு கூப்பன் என 2018 டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்த வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+