Sell your posh car, repay the loan uk court ordered to vijay mallaya. தம்பி உங்க கார வித்து வர்ற காச அப்புடியே, நீங்க கடன் வாங்குன பேங்குக்கு கொடுத்திடுங்க. லண்ட நீதி மன்றம் விஜய் மல்லையா மீது அதிரடி.
உலகப் புகழ் ஓடிப் போன தொழில் அதிபர் vijay mallaya இந்திய வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் இருப்பது தெரியும். அதோடு விஜய் மல்லையாவுக்கு இந்தியாவில் இருக்கும் பெரிய வீடுகள் பங்களாக்களை எல்லாம் ஏலம் விட்டு, கிடைத்த காசை இந்திய வங்கிகள் பங்கு போட்டுக் கொண்டதும் தெரியும். மீதி காசைக் கொடுக்க முடியாமல் லண்டனுக்கு டாடா காட்டியது வரை நமக்கு தெரியும். இப்போது அதில் சின்ன ட்விஸ்ட்.
லண்டன் மல்லையா வழக்கு
இப்போது விஜய் மல்லையாவுக்கு எதிராக இந்திய வங்கிகள் பெங்களூரூ கடன் தீர்பாயத்தில் வழக்கு நடத்தி வந்தனர். இந்த வழக்கு கடந்த பல மாதங்களாக வாதப் பிரதி வாதங்களோடு சுவாரஸ்யமாக லண்டனில் நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் 11 , 2018 அன்று வழக்கை முழுமையாக விசாரித்த லண்ட நீதிபதி ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறார். அதை கேட்ட விஜய் மல்லையாவுக்கு மூட் அவுட்டே ஆகிவிட்டது.
நீதிபதி தீர்ப்பு
நீதிபதி குக்ரில் (Cockerill), விஜய் மல்லையா வைத்திருக்கும் விலை உயர்ந்த கார்களை ஏலத்தில் விட்டு வரும் தொகையை அப்படியே இந்திய வங்கிகளிடம் மல்லையா வாங்கிய கடனை திருப்பி அடைக்கும் ரீதியில் செலுத்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். இந்த கார்களின் தேய்மானம் மற்றும் தற்போதைய நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குறைந்த பட்சம் 4,04,000 பவுண்ட் ஸ்டெர்லிங் குறையாமல் ஏலத் தொகை திரட்டப் பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
கார்கள் பட்டியல்
பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையா வைத்திருக்கும் விலை உயர்ந்த கார்கள் கஸ்டமைஸ்டு நம்பர் ப்ளேட்களைக் கொண்டவைகள்.
1. 2016 Mini Countryman,
2. 2012 Maybach 62 ‘VJM1'என்கிற நம்பர் ப்ளேட் கொண்டது,
3. 2006 Ferrari F430 ‘BO55 VJM' என்கிற நம்பர் ப்ளேட் கொண்டது 4. 2014 Range Rover ‘F1 VJM' என்கிற நம்பர் ப்ளேட் கொண்டது
5. Ferrari F512M 5. OO07 VJM என்கிற நம்பர் ப்ளேட் கொண்ட Porsche Cayenne.
இந்த ஐந்து சொகுசு கார்களையும் இந்திய மதிப்புப் படி குறைந்த பட்சம் 3.86 கோடி ரூபாயிக்காவது ஏலத்தில் விட வேண்டும் என்று நீதிபதி குக்ரில் (Cockerill)உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
வீட்டில் புகுந்து தேடலாம்
அதோடு இந்திய அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு விஜய் மல்லையா லண்டனில் வசிக்கும் வீட்டில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு செல்லவும் அந்த உத்தம நீதிபதி அனுமதி கொடுத்திருக்கிறார். விஜய் மல்லையாவுக்கு லண்டனில் இரண்டு வீடுகள் இருக்கின்றன.
குஷியான அதிகாரிகள்
அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த தீர்ப்பில் மகிழ்ச்சி அடைந்தாலும், வங்கிகளுக்கு இன்னும் சோகம் மீளவில்லை. காரணம் மல்லையா வாங்கி இருக்கும் 9000 கோடி ரூபாய் கடனுக்கு வெறும் 3.8 கோடி ரூபாய் தான் கிடைக்கும் என்றால் என்ன செய்வார்கள். அதோடு
அரசியல் காரசாரம்
பாஜகவினர் இது காங்கிரஸில் கொடுக்கப்பட்ட கடன் தான். அதையே நாங்கள் மீட்டுக் கொண்டு வருகிறோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் காரர்களோ கடன் கொடுத்தது எங்கள் காலத்தில் என்றால் தப்பிச் சென்றது யார் காலத்தில் இந்திரா காந்தி காலத்திலா என்று பதிலுக்கு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக எப்படியோ மீட்கும் தொகை கடனுக்கு போதவில்லை என்பது மட்டும் உண்மை என்பதை இங்கு மறுப்பதற்கு இல்லை என்று எந்த கட்சியினரும் வாய் திறக்கவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications