மத்திய நேரடி வரி வாரியம் திங்கட்கிழமை நேரடி வரி ஜிடிபி விகிதம் கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து உயர்ந்து 2017-2018 நிதி ஆண்டில் 5.98 சதவீதமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
வருமான வரி தாக்கல்
கடந்த 4 நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2013-2014 நிதி ஆண்டில் 3.79 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்திருந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 6.85 கோடி நபர்களாக அதிகரித்துள்ளனர்.
வரி செலுத்துபவர்கள்
வரி தாக்கல் செய்பவர்களில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 85 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-2014 மதிப்பீட்டு ஆண்டில் 3.31 கோடி நபர்கள் வரி செலுத்திய நிலையில் 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 5.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வரி செலுத்துபவர்களின் வருவாய்
வருமான வரி தாக்கல் செய்பவர்களுள் 67 சதவீதத்தினரின் வருவாய் அதிகரித்து 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 44.88 லட்சம் கோடி ரூபாயாகவும், 2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் 26.92 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட நேரடி வரி வருவாய்
நிறுவனங்கள் செலுத்தும் நேரடி வரி வருவாயும் 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 49.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே 2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் 32.28 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
தனிநபரிடமிருந்து வசூல் செய்யப்பட்ட நேரடி வரி வருவாய்
தனிநபர்கள் செலுத்தும் நேரடி வரி 26 சதவீதம் அதிகரித்து 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 58,576 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் 46,377 கோடி ரூபாயாக இருந்தது.
மாத சம்பளம்
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மாத சம்பளம் வாங்கி வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்து 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 2.33 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் 1.70 கோடியாகும்.
தனிநபர் சராசரி சம்பளம்
தனிநபர்களின் சராசரி சம்பளம் 19 சதவீதம் உயர்வு என 5.76 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 6.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications