ஒரு காலத்தில் மொபைல் போன் உலகில் கொடிகட்டி பறந்துகொண்டு இருந்து நோக்கியா ஸ்மார்ட்போன் சூறாவளியில் சிக்கி காணாமல் போனது. ஆனால் தற்போது இழந்த இடத்தினை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல புதிய ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு நோக்கியா தனது அதிரடியைக் காட்டி வருகிறது.
விழா காலச் சலுகைகளை ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில் நோக்கிய தனது போன்களின் விலையைக் குறைந்தது 1000 ரூபாய் முதல் 13,000 ரூபாய் வரை குறைத்துள்ளது.
எனவே எந்த மாடல் நோக்கியா போன்களின் விலை எல்லாம் குறைந்துள்ளது என்று இங்குப் பார்ப்போம்.
நோக்கியா 3.1
நோக்கியா 3.1 போன் மூன்று மாதங்களுக்கு முன்பு 11,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது 1,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 10,999 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3 ஜிபி ராம், 32 ஜிபி உட்புற சேமிப்பகம், 5.2 இஞ்ச் திரை, 13 மிகா பிக்சல் கேமரா மற்றும் 2,990 mAh பேட்டரி போன்ற அம்சங்கள் நோக்கியா 3.1 போனில் உள்ளன.
நோக்கியா 5.1
மே மாதம் விற்பனைக்கு வந்த நோக்கியா 5.1 போன் 1,500 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3ஜிபி ராம், 32 ஜிபி உட்புற சேமிப்பகம், 3060 mAh பேட்டரி போன்ற வசதிகள் உள்ளது.
நோக்கியா 6.1
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3ஜிபி ராம், 32 ஜிபி உட்புற சேமிப்பகம் மற்றும் 4 ஜிபி ராம், 65 ஜிபி உட்புற சேமிப்பகத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு மாடல்களிலும் 1,500 மற்றும் 1,000 ரூபாய் என விலை குறைக்கப்பட்டு 13,499 ரூபாய் மற்றும் 16,499 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நோக்கியா 8 சிரோகோ
ஒன்பிள்ஸ் 6 மற்றும் போக்கோ எப் 1 உள்ளிட்ட போன்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 8 சிரோகோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 13,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
6 ஜிபி ராம், 128 ஜிபி உட்புற சேமிப்பகம், 5.5 இஞ்ச் டிஸ்பிளே போன்ற அம்சங்கள் இந்தப் போனில் உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications