டெலிகாம் துறை ஊழியர்களுக்கு பேராபத்து.. 6 மாதத்தில் 60,000 நபர்கள் வேலை இழக்க வாய்ப்பு!

டெலிகாம் துறையில் 2018-2019 நிதி ஆண்டின் இறுதிக்குள் 60,000 ஊழியர்கள் தங்களது வேலை வாய்ப்பினை இழக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

டெலிகாம் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவதே இந்தப் பணி நீக்க நடவடிக்கைக்கான முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

வேலை இழப்பு

வேலை இழப்பு

இந்திய டெலிகாம் துறையில் மார்ச் 31-ம் தேதிக்குள் 65,000 ஊழியர்கள் வரை வாடிக்கையாளார்கள் சேவை மற்றும் நிதி செயல்பாடுகள் பிரிவுகளில் தங்களது பணியினை இழக்க வாய்ப்புள்ளதாக டீம்லீஸ் சவீஸஸ் பணியாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு பிரிவுகளில் மட்டும் 7,000 மற்றும் 8,000 ஊழியர்கள் தங்களது வேலையை இழப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.

 ஃபெரஷர்களுக்கு வாய்ப்பு

ஃபெரஷர்களுக்கு வாய்ப்பு

பணி நீக்கம் நடைபெறுவது டெலிகாம் நிறுவனங்களின் வருவாயினை அதிகப்படுத்த உதவும் என்பது மட்டும் இல்லாமல் ஃபெரஷர்களை அதிகளவில் பணிக்கு எடுக்கும் திட்டங்கள் உள்ளதாகவும் டீம்லீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரித்துபர்ன சக்ரபோர்டி தெரிவித்துள்ளார்.

 2020 வரை தொடரும்

2020 வரை தொடரும்

நடப்பு நிதி ஆண்டு மட்டும் இல்லாமல் 2019-2019ல் கூட டெலிகாம் துறையில் வேலை வாய்ப்பு இழப்புகள் அதிகளவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளது என்றும் ராண்ட்ஸ்டாண்ட் இந்தியா தெரிவித்துள்ளது.

அரையாண்டு அறிக்கை

அரையாண்டு அறிக்கை

டெலிகாம் துறையில் 2018-2019 நிதி ஆண்டின் அரையாண்டில் மட்டும் அதாவது கடந்த 6 மாததிதில் 15,000 முதல் 20,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2017-2018 நிதி ஆண்டில் டெலிகாம் நிறுவனங்கள் வெளியேறிய விகிதம் 20 முதல் 25 சதவீதமாக உள்ளது.

மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

இந்தியாவில் ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஜியோ உள்ளிட்ட முக்கிய டெலிகாம் நிறுவனங்கள் உள்ள நிலையில் அவற்றில் 25 லட்சம் ஊழியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

ஊழியர்கள் வெளியேற்றம் தரவு குறித்துப் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் வோடாபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புக்கொன்று கேட்ட போது தகவல் அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் ஜியோ சேவை வந்த பிறகு மிக மோசமான நிலையில் இந்திய டெலிகாம் துறை இருந்து வந்தது. ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட பாதிப்புகளும் ஊழியர்களைத் தக்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+