கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..!

கடந்த 4 நிதியாண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் சுமார் 68 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்பு அதாவது 2014-15ஆம் நிதியாண்டில் வருமான வரித்துறையின் தரவுகள் படி 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருடாந்திர வருமானம் உள்ளவர்களின் எண்ணிக்கை 48,416 ஆக இருந்ததுள்ளது.

2017-18

2017-18

இந்த எண்ணிக்கை 2017-18ஆம் நிதியாண்டு காலத்தில் அதாவது 3 வருட இடைவெளியில் 68 சதவீதம் வரையில் உயர்ந்து 81,344 ஆக உயர்ந்துள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

TAX to GDP

TAX to GDP

மேலும் வருமான வரித்துறை வெளியிட்ட தரவுகளில் கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிப்கு TAX to GDP விகிதத்தின் அளவு 5.9 சதவீதமாக உள்ளது எனவும் அறிவித்துள்ளது வருமான வரித்துறை.

வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை

வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை

நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 5.8 கோடியாக உயர்ந்துள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவு 3.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 61 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

மேலும் மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறை செய்த பல்வேறு பணிகளின் மூலம் புதிதாக வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை இந்த வருடம் 1.25 கோடி வரையில் உயரும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+