டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்.சந்திரசேகரன் தற்போது டாடா குழுமத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் டிசிஎஸ் நிறுவனம் பல மடங்கு உயர்ந்தது மட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் பிற துறை வர்த்தகம் சரிந்த போது அதனை ஈடு செய்யும் வகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தினார்.
டிசிஎஸ் டூ டாடா குழுமம்
டிசிஎஸ் நிறுவனத்தை விட்டு டாடா குழுமத்தின் தலைவராக இவர் பதவியேற்ற போது டாடா குழுமத்தின் மொத்த வருமானத்தில் 85 சதவீத வருமான டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு
இந்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் சந்திரசேகரனின் சம்பளத்தைப் பார்க்கும் போது டிசிஎஸ் தலைவராக அவர் பெற்ற சம்பளத்தை விடத் தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
லாபத்தில் பங்கு
மார்ச் 2018 உடன் முடிவடைந்த நிதியாண்டில் 56 வயதான சந்திரசேகரன் சுமார் 55.11 கோடி ரூபாயை மொத்த சம்பளமாகப் பெற்றுள்ளார். இதில் 85 சதவீத தொகை கமிஷன் மற்றும் லாபத்தில் பங்கீடு என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் சுமார் 100 நிறுவனங்களுடன் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உப்பு முதல் மென்பொருள் வரையில் பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இக்குழுமத்தின் மொத்த மதிப்பு மட்டும் 103 பில்லியன் டாலர். இந்த மாபெரும் நிறுவனத்தைத் தலைவராகப் பிப்ரவரி 2017ஆம் ஆண்டுச் சந்திரசேகரன் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
டிசிஎஸ் - சம்பளம்
2017ஆம் நிதியாண்டில் 11 மாதம் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய போது இவர் 30.15 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார்.
சைரஸ் மிஸ்த்ரி
பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி-யின் சம்பளத்தை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகச் சம்பளத்தைச் சந்திரசேகரன் பெறுகிறார். சைரஸ் 16 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications