பெட்ரோல் போடவே காசு இல்லங்குற, ஆஃபர் மட்டும் 50 லட்சத்துக்கு அள்ளி விட்டுகிட்டு இருக்க...!

இரண்டு வாரத்தில் தீபாவளி பண்டிகை வரும் நிலையில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் 64 வழித்தடங்களில் பயணிக்கு அதிரடி சலுகையினை அறிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் தீபாவளி அதிரடி விற்பனையாக 10 லட்சம் டிக்கெட்களுக்குச் சலுகையும், குறைந்தபட்சம் 899 ரூபாய் ம் முதல் விமானப் பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சலுகை காலம்

சலுகை காலம்

2018 அக்டோபர் 24 முதல் 2018 அக்டோபர் 26 வரை டிக்கெட்களைப் புக் செய்து 2018 நவம்பர் 8 முதல் 2019 ஏப்ரல் 15 வரையிலான விமானப் பயணங்களை இந்தத் தீபாவளி சலுகை கீழ் பெறலாம்.

டிக்கெட் சலுகைகள்

டிக்கெட் சலுகைகள்

தீபாவளி சலுகையில் உள்நாட்டு விமான விமானப் பயண டிக்கெட்கள் கட்டணத்தினை 899 ரூபாய் முதலும், வெளிநாட்டு விமானப் பயண டிக்கெட்களை 3399 ரூபாய் முதல் செய்யலாம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 டிக்கெட்கள் எங்குக் கிடைக்கும்?

டிக்கெட்கள் எங்குக் கிடைக்கும்?

www.goindigo.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்கள் சலுகை விலையில் கிடைக்கும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. மேலும் சலுகை விலை டிக்கெட்களை 15 நாள் பயணத்திற்கு முன்பே புக் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாபம் ஈட்டும் நிறுவனம்

லாபம் ஈட்டும் நிறுவனம்

இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்தும் நட்டம் அடைந்து வரும் நிலையில் தொடர்ந்து லாபத்தினைப் பதிவு செய்யும் விமானப் போக்குவரத்து நிறுவனமாகவும், 40 சதவீத உள்நாட்டு விமானப் பயணச் சந்தையினையும் இண்டிகோ தன் வசம் வைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+