நாட்டின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் சுமார் 2,540 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த காலாண்டை விடவும் 5.7 சதவீதம் அதிகமாகும்.
ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் 2,403 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருவாய் 7 சதவீதம் அதிகரித்து 14,861 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, அதேபோல் டாலர் வருவாய் அடிப்படையில் 2 சதவீதம் உயர்ந்து 2,099 மில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.
இதன் மூலம் 2109ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 9.5-11.5 சதவீதம் வரையில் உயரும் என ஹெச்சிஎல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
காலாண்டு முடிவின் போது இந்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 2 ரூபாய் ஈவுத்தொகை அளிப்பதாக அறிவித்துள்ளது.
இக்காலாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 20 மில்லியன் டாலரில் 3, 10 மில்லியன் டாலரில் 3, 5 மில்லியன் டாலரில் 2, 1 மில்லியன் டாலரில் 4 எனத் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனிடையில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 17.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் புதிய ஊழியர்களின் எண்ணிக்கை 12558 இல் இருந்து 11,683ஆகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications