இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ன்ஸி ஏடிஎம் சேவை திங்கட்கிழமை முதல் பெங்களுரிவில் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய குற்றப் பிரிவு அதனைப் பரிமுதல் செய்தது மட்டும் இல்லாமல் அதன் இணை நிறுவனரையும் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிட்காயின் முதலீடு செய்யத் தடை இல்லை என்றாலும் அது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதல்ல என்றும் பணத்தினை இழந்தார் அரசும், ரிசர்வ் வங்கியின் பொறுப்பேற்காது என்று கூறப்பட்டு வரும் நிலையில் யூனோகாயின் நிறுவனம் இந்த ஏடிஎம் மையத்தினைத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
கிரிப்டோகரன்ஸி ஏடிஎம்
பெங்களூரு எச்ஏஎல் பகுதியில் உள்ள கெம்ப் ஃபோர்ட் மாலில் சென்ற வாரம் சோதனை முயற்சியாக இந்தக் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் இயந்திரத்தினை அமைத்த யூனோ காயின் நிறுவனம் குறைந்தது 1000 ரூபாய் வரை ரொக்க பணத்தினை டெபாசிட் செய்து பிட்காயின் போன்றவற்றை வாங்கலாம் என்று தங்களது சமுக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தது.
வைரல்
கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் குறித்த செய்திகள் மற்றும் சமுக வலைத்தளங்களில் வைராலன நிலையில் மத்திய குற்ற பிரிவு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
கைது
மேலும் கைது செய்யப்பட்ட யூனோகாயின் இணை நிறுவனரான விஜய் குமாரை விசார்த்த போது இந்த ஏடிஎம் சேவைக்காக இவர் ஆர்பிஐ மற்றும் உள்ளூர் நிறுவன சட்டங்கள் படி பதிவு செய்து யாரிடமும் அனுமதியினையும் பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
பரிவர்த்தனைகள்
இந்தப் பரிவர்த்தனை வெளிப்படையாக இருக்காது என்றும், முதலீட்டாளர்கள் ஏமாற நேரிடும் என்றும் ஏடிஎம் இயந்திரம் பிட்காயினின் நடப்பு மதிப்புகளைக் காண்பிக்காது என்றும் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
பரிமுதல்
விஜய் குமாரை கைது செய்த போது அவரிடம் இருந்து 2 லேப்டாப்புகள், ஒரு மொபைல் போன், 5 டெபிட் கார்டு, ஒரு பாஸ்போர்ட், ஒரு கிரிப்டோகரன்ஸி சாதனம் மற்றும் ரொக்க பணம் 1.79 லட்சம் ரூபாயினைப் பரிமுதல் செய்துள்ளனர். மேலும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications