இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் மாதத்திற்குள் 60,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்படுகின்ற செய்தி இத்துறை ஊழியர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ தனது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

தற்போது டெலிகாம் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள மிக முக்கியமான சேவையாகக் கருதப்படும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த ஏர்டெல், கூகிள் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
கூகிளின் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கூகிள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை அளிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது ஏர்டெல், இதற்கான ஒப்பந்தமும் இரு நிறுவனங்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.
மேலும் ஜியோ நிறுவனம் ஏற்கனவே அனைத்துச் சேவைகளிலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைப் போல் வாடிக்கையாளர் சேவையிலும் பயன்படுத்த துவங்கியுள்ளது.
ஏர்டெல், ஜியோ நிறுவனத்தின் இந்த முடிவால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளவர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் தற்போது ஏற்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தவதன் மூலம் மனிதர்களின் தேவை குறையும்.


Click it and Unblock the Notifications