இந்தியாவின் 4-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ 2018-2019 நிதி ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டின் அறிக்கையினைப் புதன் கிழமை வெளியிட்டது. அதில் லாபம் 13.8 சதவீதம் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது விப்ரோவின் நிகர லாபம் 11 சதவீதம் சரிந்து 2,121 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 13.8 சதவீதம் சரிந்துள்ளது.
வருவாய்
லாபம் சரிந்த அதே நேரம் வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள விப்ரோ சென்ற வருடத்தின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 9.2 சதவீதம் வருவாய் அதிகரித்து 14,541 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செலவுகள் அதிகரிப்பு
செப்டம்பர் காலாண்டில் விப்ரோவின் செலவு அதிகரித்ததே இந்த நிகர லாபம் இழப்பிற்குக் காரணம் என்றும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது செலவுகள் 13 சதவீதம் அதிகரித்து 12,628 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பங்குகள் மீதான வருவாய்
விப்ரோவின் 2 ரூபாய் மதிப்பிலான ஒரு பங்கு மீதான வருவாய் முதல் காலாண்டில் 4.71 ரூபாயாக இருந்து வந்த நிலையில் 2-ம் காலாண்டில் 1.19 ரூபாயாகச் சரிந்துள்ளது.
ஊழியர்கள் நிலை என்ன?
லாபம் சரிந்துள்ளதால் நடப்புக் காலாண்டில் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையினை விப்ரோ குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விப்ரோ நிறுவனத்தின் இந்தச் சரிவுக்கு அவர்களுக்கு முக்கிய வாடிக்கையாளர்கள் பலர் திவால் ஆனதே காரணம் என்றும் கூறப்படுகிறது.
அருந்ததி பட்டாச்சாரியா
எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சாரியாவினை தனிப்பட்ட இயக்குநராக நியமிப்பதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு சந்தை
காலாண்டு அறிக்கை வெளியாக இருந்த நிலையில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் சந்தை நேர முடிவில் 0.05 புள்ளிகள் என 0.02 சதவீதம் சரிந்து 309.25 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications