நாங்க இனி MLA ஆகணும்..? இத பாத்து சொல்லுங்க?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்ததால் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகச் சட்டப்பேரவை தலைவர் தணப்பால் 18 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்துத் தங்கத்தமிழ் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்து முதல் இரண்டு நீதிபதிகளில் ஒருவர் தகுதி நீக்கம் சரி என்றும், மற்றோறுவர் தவறு என்றும் கூறியதால் 3 நீதிபதி மரவுக்கு மாற்றப்படு விசாரணை நடைபெற்று வந்தது.

அதன் தீர்ப்பு இன்று காலை 10:30 மணியளவில் வெளியான நிலையில் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. எனவே இந்தத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இங்குப் பார்ப்போம்.

 வெற்றிவேல் - பெரம்பூர்

வெற்றிவேல் - பெரம்பூர்

2016-ம் ஆண்டுத் தேர்தலின் போது பெரம்பூ தொகுதியில் அதிமுகச் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வெற்றிவேல் 2016-ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட போது தனது பெயரில் 1,50,450 ரூபாய் ரொக்க பணமும் தனது மனைவியிடம் 10,350 ரூபாயும் ரொக்க பணம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 26,ll,l40 ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் பைக் நகை 500 கிராம் போன்றவை இருப்பதாகக் கணக்குக் காண்பித்துள்ளார். இவை மட்டும் இல்லாமல் அசையா சொத்துக்களான வீடு, நிலம் என 1,50,000,00 மதிப்பில் வைத்துள்ளார்.

எச்டிஎப்சி வங்கியில் 18,07,472 ரூபாய் கார் கடனும், 3,52,598 ரூபாய் பைக் கடனும் உள்ளது.

 

 ஆர்.சுந்தர்ராஜ் - ஓட்டப்பிடாரம் தொகுதி

ஆர்.சுந்தர்ராஜ் - ஓட்டப்பிடாரம் தொகுதி

அதிமுகச் சார்பில் வென்றவர் ஆர்.சுந்தர்ராஜ். ஆர்.சுந்தர்ராஜ் இதில் வெறும் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது அசையும் சொத்து மதிப்பு 1,29,70,608 ரூபாயும், மனைவியின் சொத்து மதிப்பு 42,63,313 ரூபாயும், பிள்ளைகள் பெயரில் 1,68,000 ரூபாயும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பெயரில் 1,70,28,479 ரூபாய் அசையா சொத்தும், மனைவி பெயரில் 53,12,199 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் வைத்துள்ளதாகக் கணக்குக் காண்பித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 62 லட்சம் ரூபாய் கடனும் இவருக்கு உள்ளது.

 

எஸ்.ஜி.சுப்பிரமணியன்

எஸ்.ஜி.சுப்பிரமணியன்

சாத்தூரை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.ஜி.சுப்பிரமணியன். அதே தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றிருந்தார். இந்தத் தொகுதியில் போட்டியிட்டவர்களின் சொத்துவிவரங்கள் கிடைக்கவில்லை.

கே.உமாமகேசுவரி

கே.உமாமகேசுவரி

தூத்துக்குடியைச் சேர்த்தவர் கே.உமாமகேசுவரி. இவர் விளாத்திகுளம் தொகுதியில் வெற்றிபெற்றார். 2016-ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிடும் போது இவர் வசம் 5 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் இன்சூரன்ஸ் 2 லட்சம் ரூபாயும், அவரது கணவர் பெயரில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடும் இருந்தது.

டாக்டர் எஸ்.முத்தையா

டாக்டர் எஸ்.முத்தையா

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் எஸ்.முத்தையா. இவர் பரமக்குடி தொகுதியில் வெற்றிபெற்றவர் ஆவார்.

ரொக்க பணம்: ரூ.9 லட்சம்
வங்கி கணக்கு: 1 லட்சம் ரூபாய்
எல்ஐசி: ரூ.60,000
வாகனங்கள்: ரூ. 18,05,000/-
விளை நில மதிப்பு: ரூ. 1,43,00,000/-
பிற சொத்துக்கள் ரூ.33,00,000/-

 

மு.கோதண்டபாணி

மு.கோதண்டபாணி

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மு.கோதண்டபாணி. இவர் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

ரொக்க பனம்: 40 ஆயிரம் ரூபாய்
மனைவி (வங்கி கணக்கு): ரூ.5 லட்சம்
தன்னுடைய வங்கி கணக்கு: ரூ. 1 லட்சம்
அசையா சொத்து ம் அதிப்பு: ரூ. 1,49,60,000/-

 

டி.ஏ.ஏழுமலை

டி.ஏ.ஏழுமலை

சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் டி.ஏ.ஏழுமலை. இவர் பூந்தமல்லி தொகுதியில் திமுகவின் கோட்டையிலேயே வென்றார்.

ரொக்க பணம்: ரூ.60,000/-
வங்கி கணக்கு: ரூ.1.20 லட்சம்
வாகனம்: ரூ.10 லட்சம்
நகை: ரூ. 6 லட்சம்
அசையா சொத்து: ரூ. 68,53,700/-
கடன்: ரூ. 4 லட்சம்

 

ஆர்.பலசுப்பிரமணி

ஆர்.பலசுப்பிரமணி

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.பலசுப்பிரமணி. இவர் ஆம்பூர் தொகுதியில் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட்டவர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் கிடைக்கவில்லை.

சி.ஜெயந்தி பத்மநாபன்

சி.ஜெயந்தி பத்மநாபன்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சி.ஜெயந்தி பத்மநாபன். இவர் குடியாத்தம் தொகுதியில் வெற்றிபெற்றார்.

அசையும் சொத்து மதிப்பு: ரூ.28,08,967/-
அசையா சொத்து மதிப்பு: ரூ.69,48,500/-
கடன்: ரூ. 68,80,000/-

 

பி.பழனியப்பன்

பி.பழனியப்பன்

பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர் பி.பழனியப்பன். இவர் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் வெற்றிபெற்றார்.
அசையும் சொத்து மதிப்பு: ரூ.8,22,452/-
அசையா சொத்து மதிப்பு: ரூ.2,50,000/-

வி.செந்தில்பாலாஜி

வி.செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.செந்தில்பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார்.

அசையும் சொத்து மதிப்பு: ரூ. 1,05,01,198.19
அசையா சொத்து மதிப்புள் ரூ.1,10,00,000/-
கடன்: ரூ. 8,33,696.00/-

 

தங்க.தமிழ்ச்செல்வன்

தங்க.தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்க.தமிழ்ச்செல்வன். இவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றிபெற்றார்.

அசையும் சொத்து மதிப்பு: ரூ. 71,66,623/-
அசையா சொத்து மதிப்பு: ரூ. 1,24,76,450/-
கடன்: ரூ. 13,28,654/-

 

டாக்டர் கே.கதிர்காமு

டாக்டர் கே.கதிர்காமு

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கே.கதிர்காமு. இவர் பெரியகுளம் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார்.

அசையும் சொத்து: ரூ. 40,70,269/-
அசையா சொத்து: ரூ. 50,50,000/-
கடன்: ரூ. 7,00,000/-

 

எம்.ரங்கசாமி

எம்.ரங்கசாமி

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ரங்கசாமி. இவர் தஞ்சாவூர் தொகுதியில் வெற்றிபெற்றார்.

அசையும் சொத்து மதிப்பு: ரூ. 50,83,847/-
அசையா சொத்து மதிப்பு: ரூ. 17,00,000/-
கடன்: ரூ. 23,93,972/-

 

ஆர்.முருகன்

ஆர்.முருகன்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.முருகன். இவர் அரூர் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார்.

அசையும் சொத்து மதிப்பு: ரூ. 19,25,000/-
அசையா சொத்து மதிப்பு: ரூ. 5,00,000/-
கடன்: ரூ. 20,99,500/-

 

சோ.மாரியப்பன் கென்னடி

சோ.மாரியப்பன் கென்னடி

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோ.மாரியப்பன் கென்னடி. இவர் மானாமதுரை தொகுதியில் வெற்றிபெற்றார்.

அசையும் சொத்து மதிப்பு: ரூ. 2,61,491.93
அசையா சொத்துமதிப்பு: இல்லை
கடன் : இல்லை

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+