டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தால் தலைவர் பதவியில் இருந்தது மட்டும் அல்லாமல் டாடா நிறுவனங்களில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இரு தரப்புகளும் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டதில் சைரஸ் மிஸ்திரி மற்றும் மிஸ்திரி குடும்பத்தில் இருக்கும் டாடா குழுமத்தின் பங்குகளை டாடா சன்ஸ் நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதனால் பல மாதங்களாக இந்திய கார்பரேட் சந்தையில் இடம் இல்லாமல் காணாமல் போனார்.
இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி புதிய திட்டத்துடன் கார்பரேட் சந்தையிலும் நுழைந்துள்ளார். சைரஸ் மிஸ்திரி புதிதாக மிஸ்திரி வென்சர்ஸ் LLP என்ற பெயரில் ஒரு முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் வளரும் திறன் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இப்புதிய நிறுவனத்தில் உலகின் முன்னணி வர்த்தக ஆய்வு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. பாஸ்டன் கண்சல்டிங் குரூப் நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஆஷிஷ் ஐயர் இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications