விமானப் போக்குவரத்துச் சந்தையில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் இண்டிகோ நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு முதல் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ள காரணத்தாலும், ரூபாய் மதிப்பின் சரிவாலும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மட்டும் அல்லாமல் லாபமும் அதிகளவில் சரிந்துள்ளது.

இக்காலாண்டில் நாட்டின் மலிவு விலை விமானச் சேவை அளிக்கும் இண்டிகோ நிறுவனம் சுமார் 652 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்தச் செய்தி இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது.
சமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சிறப்பான முறையில் இயங்கும் நிறுவனமாகத் திகழ்ந்த இண்டிகோ தற்போது முதல் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
2017-18ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 17 சதவீதம் வரையில் சரிந்து 6,185 கோடி ரூபாயாக வீழ்ந்துள்ளது.
தற்போது இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் விலை போர் அதிகரித்துள்ள நிலையில், இண்டிகோ நிறுவனத்தில் போட்டியில் ஈடுகொடுத்து வரும் காரணத்தால் இந்நிறுவனம் லாபத்திலும், வருவாயிலும் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications