நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் சுமார் 211.31 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
ஆட்டோமொபைல் சந்தையில் போட்டி அதிகரித்துள்ள காரணத்தால் டிவிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகம் கணிசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாகவே கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சற்று குறைவான லாபத்தைப் பெற்றுள்ளது டிவிஎஸ் மோட்டார்ஸ்.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் டிவிஎஸ் நிறுவனம் 213.16 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 211.31 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
இக்காலாண்டில் டிவிஎஸ் நிறுவனத்தின் வருவாய் சுமார் 22.85 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 4,064.72 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் 4,993.67 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.
மேலும் 2018-19ஆம் நிதியாண்டில் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 2.10 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது டிவிஎஸ் நிர்வாகம்.


Click it and Unblock the Notifications